News

Sunday, 29 November 2020 10:10 AM , by: Daisy Rose Mary

வரும் டிசம்பர் 2ம் தேதி தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி கடந்த சனிக்கிழமை உருவானது. இது அடுத்த 36 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகனமழைக்கு வாய்ப்பு 

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகரும். தாழ்வு மண்டலம் வலுவடைந்து டிசம்பர் 2 ஆம் தேதி தென் தமிழகத்தின் கடற்கரையை நெருக்கும். இதன் காரணமாக, தமிழகம் மற்றும் கேரளத்தில் அன்று அதிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தாழ்வு மண்டலாக மாறும் என்று கணிக்கப்பட்ட நிலையில், இதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வரும் டிச- 2ம் தேதி தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் அன்று தமிழகத்திற்கு ரெட் அலர்ட் (Red alert) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)