எதிர்பாராத இயற்கை சீற்றங்களால், விவசாயிகள் விளைவித்த பயிர்கள் நாசமடைந்து மகசூல் குறைந்து விடுகிறது. இதனால், விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்படுகிறது. விவசாயிகளின் நலன் காக்க பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீடு திட்டத்திற்கு வரும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு, அம்மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு:
காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் (Associate Director of Agriculture) கோல்டி பிரேமாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2020-21ம் ஆண்டு நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிருக்கு திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் (Crop Insurance Scheme) இப்கோ டோக்கியோ நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதில், அரசு வழிகாட்டுதலின்படி மொத்த இழப்பீடு தொகையில் 80 சதவீதம் தமிழக அரசும், 20 சதவீதம் காப்பீடு நிறுவனமும் வழங்க உள்ளன.
பயிர்க் காப்பீடு செய்ய கடைசித் தேதி:
சம்பா நெல் பயிருக்கு (samba paddy crop) காப்பீடு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.451 பிரீமியம் தொகை செலுத்த வேண்டும். சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல்பயிர் காப்பீடு செய்ய வரும் 30ம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்ய, பொது சேவை மையம் (Public Service Center), தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகி காப்பீடு செய்யலாம். எனவே, எதிர்பாராத இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் (Yield) இழப்பை தவிர்க்க உடனடியாக அனைத்து விவசாயிகளும் சம்பா நெல்பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
விவசாயதுறைக்கு பல கோடி நிதி உதவி! பயன்பெற்ற 2.5 கோடி விவசாயிகள்! பட்டியலிட்ட நிர்மலா சீதாராமன்!