News

Tuesday, 26 March 2019 03:51 PM

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹசன் அவர்கள் கடந்த 20 ஆம் தேதி முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட நிலையில் ,  நேற்று 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலையும், தேர்தல் அறிக்கையும் வெளியிட்டார். மேலும் அவர் இந்த நாடாளுமன்றம் தேர்தலில் தான்போட்டியிடவில்லை என்றும் தெரிவித்தார்.

போட்டியிடும் வேட்பாளர்கள்

வேட்பாளர்களை குறித்து பேசுகையில், என் கட்சியின் வேட்பாளர்களுக்கு,"  தேர் பாகனாக" இருப்பதில் பெருமை கொள்கிறேன். அக்கட்சியின் சார்பாக முன்னாள் IAS அதிகாரி திரு.ரங்கராஜன், தென் சென்னை தொகுதியிலும் , கவிஞர் சினேகன், சிவகங்கை  தொகுதியிலும், மூகாம்பிகை, பொள்ளாச்சி தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்தார்.

தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சம்

தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் மக்கள் நீதி மையமும் நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டது. பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

மக்கள் நீதி மையத்தின் முக்கிய கொள்கையாக லஞ்சம், ஊழல் ஒழிப்பு, கிராமப்புற மேம்பாடு ஆகும். இத்தேர்தலின் பிரதான வாக்குறுதியாக சுத்தமான குடிநீர்,   பெண்களுக்கான இடஒதிக்கீடு என்பனவாகும்.

இவ்வறிக்கையில் முக்கியம்சமாக, பெண்களுக்கான இடஒதிக்கீடு, விவசாயிகளுக்கு இலாபம் ஈட்டும் வைகையில் முறையான சந்தை, 50 இலட்ச  வேலைவாய்ப்பை உருவாக்குதல், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெருவாரியான மக்களின் வாழ்கை தரம் உயர்த்துதல், தேசிய நெடுசாலைகளில் உள்ள சுங்கச்சாலை நீக்குதல், இலவச மற்றும் மானிய விலையில் வீடுகள், ரேஷன் பொருட்கள் நேரிடையாக மக்கள் வீடுகளுக்கு சென்றடையும் வைகையில் வகை செய்தல் மற்றும் இலவச ஒய்-பை போன்றவையாகும்.

ஆளுநரை தேர்தெடுக்கும் உரிமை மாநில அரசுகளுக்கானதாக இருக்க வேண்டும். திமுக மற்றும் அதிமுக காட்சிகளை விமர்ச்சித்த அவர், பிரதம மந்திரி மோடி பணக்கர்களுக்கு பாதுகாவலராக இருக்கிறார் ஏழை மக்களுக்கு அல்ல என்றார். தமிழ் இளைஞர்கள் இவ்வரசங்கத்தின் மீது பெரும் அதிதிருப்தில் இருப்பதனை " திரும்பி போ" போன்ற ட்விட்டர் வாசகங்கள் தெளிவு படுத்துகின்றன என கூறினார். 

இத்தேர்தலில் பல்வேறு பிரதான கட்சிகள் போட்டியிடும் நிலையில், மக்கள் நீதி மையமும் முதல் முறையாக போட்டியிட தயாராகி வருகிறது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)