தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் தோல்வியடைந்தவர், மத்திய அமைச்சராகவும், வெற்றி பெற்றவர் மாநில அமைச்சராகவும் பதவிவகிப்பது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்ச்சி (Pass)
பொதுவாக வெற்றி, தோல்வி என்பதற்கு ஏற்ப நமக்கான பலன்கள் கிடைக்கும். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த வகுப்புற்கு போவோம். தோல்வியுற்றால், அதே வகுப்பிலேயேத் தொடருவோம்.
பரிசு (Gift)
இதேபோல், விளையாட்டு, கட்டுரை, கவிதை, பேச்சு உள்ளிட்டப் பிறப் போட்டிகளில் வெற்றி பெற்றால், பரிசு அல்லது கோப்பைக் கிடைக்கும். தோற்றால் அந்தச்சுற்றில் இருந்து வெளியேற்றப்படுவோம்.
அதுதாங்க அரசியல் (That is tolerable politics)
ஆனால் அரசியலைப் பொறுத்தவரை, எதுவும் எப்படியும் மாறலாம் என்பதற்கு சட்டமன்றத் தேர்தலில் தோற்றவர் மத்திய அமைச்சராகியிருப்பது உதாரணமாக மாறியிருக்கிறது.
அண்மையில் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தனித் தொகுதியில், அதிமுக கூட்டணியில் பாஜக மாநில தலைவர் முருகன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் கயல்விழி போட்டியிட்டார்.
கடும் போட்டி நிலவிய போதிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எல்.முருகன் , 1,393 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டார். குறைந்த ஓட்டில் வெற்றி பறிபோனதால், பாஜகத் தொண்டர்கள் சோர்வடைந்தனர்.
அமைச்சரான கயல்விழி (Minister Kayalvizhi)
இதையடுத்து பாஜகவின் மாநிலத் தலைவரை தோற்கடித்த கயல்விழி, தமிழக அரசில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சரானார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மத்திய அமைச்சர் பதவி (Union Minister post)
இந்தச் சூழ்நிலையில், நேற்று மத்திய அமைச்சரவை விஸ்தரிக்கப்பட்டது. இதில், பாஜக மாநில தலைவர் முருகன் மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.
இதுகுறித்து பாஜகவினர் கூறுகையில், 'தாராபுரத்தில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் மாநில தலைவர் முருகன் வெற்றியை இழந்தார். தற்போது, அவர் மத்திய அமைச்சராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.
அதிகார பலம் (Power of authority)
எது எப்படியிருந்தாலும், தோற்றவர் மத்திய அமைச்சராகவும், வெற்றி பெற்றவர் மாநில அமைக்கராகவும் பதவி வகிப்பது, அரசியலில் மத்தியில் ஆட்சி வகிப்போரின் அதிகார பலமே, எப்போதும் ஓங்கியிருக்கும் என்பதை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.
மேலும் படிக்க...
தொழில் முனைவோர் மாதிரி திட்டத்தின் மூலம் மீன்வளம்-நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம்!
நிரந்தர வைப்புத் தொகையை புதுப்பிக்காவிடில் வட்டி குறைக்கப்படும்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு!