மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 February, 2021 10:05 AM IST

பிரதமரின் வேளாண் நீர்ப்பாசன திட்டத்தின் ஒரு பகுதியாக ‘சிறு துளி நீருக்கு அதிக பயிர் விளைச்சல்’ என்னும் மத்திய அரசு திட்டத்தை வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் துறை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரூ 5,000 கோடி மூலதன நிதியுடன் குறு நீர்ப்பாசன நிதியம் நபார்டின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னொரு ரூ 5,000 கோடி நிதியுடன் குறு நீர்ப்பாசன நிதியத்தின் மதிப்பு இரட்டிப்பாக்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த குறுநீர் பாசன நிதியத்தின் கீழ் ஆந்திரப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, ஹரியானா, மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ 3970.17 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்முதல் பணிகள் மும்முரம்

இதற்கிடையே, நடப்பு காரீப் சந்தைக் காலத்தில் (2020-21), காரீப் பயிர்களை, விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், தெலங்கானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், குஜராத், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பிகார், சத்திஸ்கர், கேரளா, மேற்கு வங்கம், அசாம், கர்நாடகா மற்றும் ஜார்கண்டில் நெல் கொள்முதலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

 

கொள்முதலில் 17.75% அதிகம்

இங்கு 2021 பிப்ரவரி 3 வரை 608.73 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டில் இதே காலத்தில் 516.94 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு இது வரை செய்யப்பட்டுள்ள நெல் கொள்முதல் 17.75 சதவீதம் அதிகமாகும். நடப்பு காரீப் சந்தை காலத்தில் 89.00 லட்சம் விவசாயிகள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர். இவர்கள் தங்களது விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 1,14,928.64 கோடி பெற்றுள்ளனர்.

பருப்பு & எண்ணெய் வித்துக்கள் கொள்முதலுக்கு ஒப்பதல்

மேலும், மாநிலங்கள் வேண்டுகோள்படி, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து 51.92 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆதரவு விலையில் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தை விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைந்தால், மற்ற மாநிலங்களில் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்ய, வேண்டுகோள் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

சோலார் மின்வேலிக்கு மானியம் அறிவிப்பு! - விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்களும் வரவேற்பு!!

கடைகோடி விவசாயிக்கும் நன்மை பயக்கும் "இ-நாம்" எனும் "ஒரே நாடு ஒரே சந்தை" ஆப்!

English Summary: The Micro Irrigation Fund with a corpus of Rs. 5,000 crores has been created under NABARD
Published on: 06 February 2021, 10:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now