நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு, நாளை (ஜூலை 14) தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் (MK Stalin) அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
நீட் ஆய்வுக் குழு
தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்த ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை தமிழக அரசு நியமித்திருந்தது. நீட் தேர்வு (NEET EXAM) பாதிப்பு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் என யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என இக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி, சுமார் 89,342 பேர் நீட் தேர்வுக்க ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்த கருத்துகளை பரிசீலனை செய்த ஆய்வுக்குழு, பல கட்ட ஆலோசனைகளை நடத்தியது. இந்நிலையில், ஏ.கே.ராஜன் (A.K. Rajan) தலைமையிலான ஆய்வுக்குழுவினர் தங்களின் அறிக்கையை நாளை காலை தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் சமர்பிக்கவுள்ளனர்.
தள்ளுபடி
தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு அமைத்த குழு செல்லும் என தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், நீட் ஆய்வுக் குழு அமைத்ததற்கு எதிராக பா.ஜ.,வின் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
மேலும் படிக்க
எந்நேரத்திலும் கொரோனா 3வது அலை தாக்கலாம்: இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை!
செப்டம்பர் 12ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!