சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் முடிவுக்கு வராது நிலையில், தற்போது உலகத்திற்கு அடுத்த ஆபத்து வரிசை கட்டி நிற்கிறது. இந்நிலையில் உலகத்தை அச்சுறுத்த ஆரம்பித்து விட்டது அடுத்த பாதிப்பான பறவைக் காய்ச்சல். பொதுவாக பறவைக் காய்ச்சல், கோழிகளை மட்டுமே தாக்கக் கூடம் ஒரு வைரஸ். ஆனால், இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஏனெனில், மனிதர்களையும் பாதிக்க ஆரம்பித்து விட்டது இந்த பறவைக் காய்ச்சல்.
பறவைக் காய்ச்சல் (Birds Flu) no
இந்தியாவிற்கு அண்டை நாடான சீனாவின், ஹெனான் மாகாணத்தில் தான் பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பதை கண்டறிந்துள்ளனர். 4 வயது சிறுவன் இத்தொற்றுக்கு ஆளாகி இருப்பது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காகங்கள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகள் மூலமாக பறவைக் காய்ச்சல் பரவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும், சிறுவனுடன் நெருங்கியத் தொடர்பில் இருந்த எவருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
பறவைக் காய்ச்சல் தொற்று தொடர்பாக சீனாவின் சுகாதார ஆணைய அதிகாரிகள் பல்வேறு தகவல்களை தெரிவித்து உள்ளனர். அதில், ‘எச் 3 என் 8’ என்ற வைரஸ் மாறுபாடு குதிரைகள், பறவைகள் மற்றும் நாய்கள் ஆகியவற்றில் கண்டறியப்பட்டது. ஆனால், மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவி உள்ளதாக எந்த வித பதிவும் பதிவாகவில்லை. ஆரம்ப கட்டத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, மனிதர்களை இன்னும் இந்த மாறுபாடு, மீண்டும் மறுமுறை பாதிக்கும் திறனை கொண்டிருக்கவில்லை. பெரிய அளவிலான தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு குறைவு தான் (Low for Humans)
மனிதர்களுக்கு தொற்று பாதிப்பு குறைவாக இருந்தாலும், இது பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏனெனில், கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளே இன்னும் சீராகாத நிலையில், பறவைக் காய்ச்சலினால் பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க