விவசாயி ஒருவர் சுயநலத்திற்காக, விஷம் வைத்து 12 மயில்களைக் கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் வனத்துறையினர், குரும்பட்டி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சைக்கிளில் ஒருவர் மூட்டையுடன் சென்று கொண்டிருந்தார். அவரை மடக்கி மூட்டையை சோதனை செய்ததில், ஆண் மயில் ஒன்று இறந்து கிடந்தது.
விசாரணையில், அவர் குரும்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பது தெரியவந்தது. 75வயதான அந்த விவசாயியின் நிலத்தில் விளைந்த நெல் பயிர்களை மயில்கள் தின்று நாசம் செய்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், மயில்கலைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டினார்.
சரியான நேரத்திற்காகக் காத்திருந்த அவர், விஷம் கலந்த அரிசியைக் கொடுத்து 12 மயில்களைக் கொன்று அங்குள்ள ஏரியில் புதைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, வனத்துறையினர் சண்முகத்தை கைது செய்தனர்.
சுயநலத்திற்காக, தேசியப் பறவையான மயில்களுக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்திருப்பது, மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க...