தங்கத்தின் விலை சமீப காலமாக ஏற்ற இறக்கமாக இருந்துவந்த நிலையில் இன்று அதிரடியாக யாரும் எதிர்ப்பாராத வகையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு
தங்கத்தின் மீதான மோகம் இன்றளவும் அதிகமாகவே உள்ளது. ஆனால் கடந்த ஒருவாரமாக யாரும் எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலை உயர்ந்தும், குறைந்தும் வந்தது. இதனால் பொதுமக்கள்/ நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இன்று 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 வரை விலை குறைந்துள்ளது. இந்த விலை இறக்கம் பொதுமக்களிடையே தங்கத்தில் முதலீடு செய்ய சிறிது நம்பிக்கையினை வழங்கியுள்ளது.
சவரனுக்கு ரூ.160 குறைவு:
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிராம் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.5,485க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்கிய மாநகரமாக திகழ்கிறது. மேற்குறிப்பிட்ட விலை சென்னையின் சந்தை நிலவரம் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டிலிருந்த படி, தங்கம் விலை அறிய; (Find out the price of gold at home)
வீட்டிலிருந்தபடியே, தங்கத்தின் விலைகளை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, 8955664433 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்தால் போதும், உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி வரும், அதில் சமீபத்திய கட்டணங்களை நீங்கள் பார்த்து பயனடையலாம்.
மேலும் படிக்க
25000 ஊக்கத்தொகை! | UPSC|விண்ணப்பிப்பது எப்படி?
யப்பாடா.. 3 ரக தக்காளியும் கிலோவுக்கு ரூ.80 வரை அதிரடி குறைவு