பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 9 December, 2021 12:46 PM IST
Jasmine Flower Price Today

மதுரை என்றாலே முதலில் நியாபகத்தில் வருவது மீனாட்சி அம்மன் கோவில் மற்றொன்று மல்லி பூ, அதுவும் குண்டு மல்லிக்கென தனி ரசிகர்களே உள்ளனர். மதுரை மாட்டுதாவனியில் உள்ள, மத்திய பூ சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதற்கு மல்லிகை பூவின் வரத்து கடுமையாக குறைந்துள்ளதே காரணம் என கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர். சராசரியாக 5 டன் மல்லிகை பூ, இந்த சந்தைக்கு விற்பனைக்காக வந்திறங்கும் சூழலில், தற்போது 500 கிலோவுக்கும் குறைவாகவே பூ வந்திறங்கியுள்ளது என வருத்தம் தெரிவித்தனர். மேலும் நேற்று இன்று மற்றும் நாளை முகூர்த்த நாட்கள் என்பதால் விலை அதிகரிக்க வாய்ப்பு இருந்தது.

பொதுவாக மழை காலத்தில் மல்லிகை பூவின் உற்பத்தி குறைந்தே காணப்படும். அதேவேளை இந்த சமயத்தை பயன்படுத்தி சில விவசாயிகள் மல்லிகை பூக்களை வளர்த்து வந்தனர். ஆனால் இம்முறை திடீரென பெய்து வரும் கனமழையால் மல்லிகை பூக்கள் செடியிலே வாடி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரை பூ சந்தைக்கு  மல்லிகை பூவின் வரத்து கடுமையாக பாதித்துள்ளது.

இதற்கிடையே ஆண்டு இறுதியில் கடைசி முகூர்த்த நாட்கள் நெருங்கியுள்ளது. இதனால் திருமணம் வைத்திருப்போர், விசேஷ வீட்டார் பூக்களை வாங்க அதிக விலை கொடுக்க வேண்டிய சுழல் ஏற்படும் என நாம் அறிந்திருந்ததே.

இந்திலையில் டிசம்பர் 06ஆம் தேதி முதல் மல்லி பூவின் விலை கிலோவுக்கு ரூ.2500 முதல் ரூ.2000மாக காணப்பட்டது. ஆனால் இன்று, மல்லிகை பூவின் விலை கிலோ, ரூ.200க்கு விற்கப்படுகிறது என்பதும் குறிப்பிடதக்கது. இந்நிலையில் முகூர்த்த நாளான நாளை விலையில் மாற்றம் காணப்படுமா என்ற ஆர்வத்தில் உள்ளனர் மக்கள்.

மேலும் படிக்க:

PM-Kisan நிதியை மத்திய அரசு உயர்த்தாது! மக்கள் ஏமாற்றம்!

எல்பிஜி சிலிண்டர் எடையை குறைக்கும் அரசு- மத்திய அமைச்சர்

English Summary: The price jasmine: yesterday today tomorrow
Published on: 09 December 2021, 12:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now