பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 8 July, 2022 8:10 AM IST

அடுத்த ஒரு வாரத்தில் சமையல் எண்ணெயின் விலை குறையும் என தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக 12 ரூபாய் வரை விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.கடந்த ஓராண்டில் நாட்டில் சமையல் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில் பணவீக்கத்தால் தத்தளிக்கும் மக்களுக்கு, தற்போது நிவாரணம் அளிக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி இன்னும் ஒரு வாரத்தில் சமையல் எண்ணெயின் விலை குறையும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

சட்ட விரோதமாக எண்ணெய் சேமிப்பிற்கு எதிராக அரசு தரப்பில் சில காலமாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக அடுத்த ஒரு வாரத்தில் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.10 முதல் 12 வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு உத்தரவு

கடந்த ஓராண்டில் நாட்டில் சமையல் எண்ணெய் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதால், சாமானியர்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்தியது.
தற்போது உலகளவில் சமையல் எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், அடுத்த ஒரு வாரத்தில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் வரை குறைக்குமாறு அனைத்து சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கும் அரசு ஜூலை 6-ம் தேதி உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமின்றி, நாடு முழுவதும் ஒரே பிராண்டின் எண்ணெய் விலையை ஒரே மாதிரியாக வைத்திருக்கவும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அறிவுறுத்தல்

இதனிடையே, தற்போது உலகளாவிய விலையில் மேலும் வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு, உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே அனைத்து சமையல் எண்ணெய் சங்கங்கள் மற்றும் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், உலக எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலனை சாதாரண நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதனை ஏற்று, எண்ணெய் நிறுவனங்கள் விலையைக் குறைப்பதாக உறுதியளித்தன.

10 ரூபாய் வரை

னவே இதன் அடிப்படையில், அடுத்த ஒரு வாரத்தில் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு 10 ரூபாய் வரை குறைக்கப்படும் என்று பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் உறுதியளித்துள்ளனர். பாமாயில், சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்ற அனைத்து இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களும் இதில் அடங்கும்.

மேலும் படிக்க...

காணாமல் போன 1.50லட்சம் ரூபாய் பேனா- வலைவீசும் போலீஸ்!

சிகரெட் பிடிக்கும் காளி- வைரல் ஆகும் விபரீதம்!

English Summary: The price of cooking oil will decrease next week!
Published on: 07 July 2022, 11:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now