பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 21 July, 2022 10:29 PM IST

தமிழகத்தில் ஆவின் தயிர், நெய் உள்ளிட்ட பால்பொருட்கள் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டதன் காரணமாக ஆவின் தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு, வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

ஜி.எஸ்.டி. கவுன்சில்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. விதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் சில பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. விகிதமும் மாற்றியமைக்கப்பட்டது.

5 % ஜி.எஸ்.டி

இந்த புதிய வரி விதிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த 18-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் முக்கியமாக பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மற்றும் லேபிள் ஒட்டி விற்கப்படும் இறைச்சி (உறைந்தது தவிர), மீன், பன்னீர், தேன், கோதுமை மாவு மற்றும் பிற தானியங்கள், தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள் ஆகியவற்றுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பால் பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டது. இதன் காரணமாக தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

புதிய விலை

இதன்படி,ஒரு லிட்டர் நெய்க்கு 50ரூபாயும் , ஒரு லிட்டர் தயிருக்கு 10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. 100 கிராம் தயிர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ஆக உயர்ந்துள்ளது.200 கிராம் தயிர் விலை 25 லிருந்து 28 ரூபாயாக அதிகரித்துள்ளது. பிரீமியம் தயிர் ஒரு லிட்டர் 100 ரூபாயில் இருந்து 120 ரூபாயாக அதிகரித்துள்ளது.ஒரு லிட்டர் நெய் 538 ரூபாயில் இருந்து-580 ரூபாயாக அதிகரித்துள்ளது.அரை லிட்டர் நெய் 275 ரூபாயில் இருந்து 290 ரூபாயாக அதிகரித்துள்ளது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரை லிட்டர் தயிர் 30 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

கூடுதல் செலவு

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆவின் பால் பொருட்களை வாங்க கூடுதல் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

மேலும் படிக்க...

மரத்தடி வைத்தியரிடம் சிகிச்சை எடுத்துவரும் தோனி!

ஆடிப்பட்டத்தில் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு- TNAU கணிப்பு!

English Summary: The price of dairy products including curd and ghee has gone up!
Published on: 21 July 2022, 10:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now