நாமக்கல்லில் இன்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளில் இருந்து 20 காசுகள் விலை உயர்த்தி 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
கடந்த ஏப்ரல் 12-ம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாயிலிருந்து 10 காசுகள் விலை உயர்த்தி 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்ட்ட நிலையில் கடந்த 19-ம் தேதி முட்டை பண்ணை கொள்முதல் விலை 10 காசுகள் விலை உயர்த்தி 4 ரூபாய் 20 காசுகளாகவும் கடந்த 22ம் தேதி மீண்டும் 10 காசுகள் விலை உயர்த்தி 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
முட்டை விலை உயர்வு (Egg price raised)
இன்று மீண்டும் முட்டையின் விலை 20 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்விலை உயர்வு குறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பண்ணையாளர்கள் வயதான கோழிகளை அதிகளவு விற்பனை செய்து வருவதால் முட்டை உற்பத்தியும் குறைந்து வரும் நிலையில், மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதோடு, ரம்ஜான் நோன்பும் முடிவுக்கு வந்ததால் முட்டை தேவை அதிகரித்த நிலையில் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயரவே வாய்ப்புகள் உள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர். அதேபோல் சென்னையில் முட்டை ஒன்றின் விலை 4 ரூபாய் 64 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளத்துடன் அகவிலைப்படி உயர்வு: மாநில அரசு அறிவிப்பு!
மகளிருக்கான ரூ.1,000 கூட்டுறவு வங்கிகளில் வழங்கல்: அமைச்சர் முக்கிய தகவல்!