News

Wednesday, 28 September 2022 07:11 PM , by: T. Vigneshwaran

Coimbatore Flower Market

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் பல்வேறு விதமான பூக்கள் விற்பனையாகி வருகின்றன.

கோவை பூ மார்க்கெட்டில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் பூக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதனிடையே இம்மாத தொடக்கத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இந்தப் பண்டிகையின் போது மலையாளம் மொழி பேசுபவர்கள் தங்களின் வீடுகளின் முன்பு பூக்களினால் கோலம் போடுவது வழக்கம். இதன் காரணமாக மாதத்தின் தொடக்கத்திலேயே பூக்கள் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. மல்லிகைப்பூ மட்டும் கிலோ 4,000 ரூபாய் வரை விற்பனையானது.

இந்தச் சூழலில் தற்போது நவராத்திரி பண்டிகை தொடங்கியுள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் மக்கள் 10 நாட்கள் வீட்டில் கொலு அமைத்து தெய்வங்களுக்கு மலர்கள் தூவி வழிபாடு செய்வது வழக்கம்.

இதனால் கடந்த இரண்டு வாரங்களாக குறைந்திருந்த பூக்கள் விலை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ மல்லிகைப்பூ தற்போது 2,000 ரூபாய் வரை விற்பனையாகிறது.

மேலும் படிக்க:

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்- டிடிவி

திருச்சியை அச்சுறுத்தும் புதிய வகை 'டைப்பஸ்' காய்ச்சல்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)