மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 November, 2021 2:38 PM IST
Drink hot water

பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பது நல்லது' என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், தலைமை செயலர் இறையன்பு தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது.

கூட்டம் முடிந்த பின், அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  • பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை அருந்துதல் நல்லது.

  • தொற்று நோய் வராமல் தடுக்க, சோப்பு போட்டு அடிக்கடி கைகளை நீரால் கழுவ வேண்டும்.

  • வெள்ள நீரில் நனைந்த உணவு பொருட்களை பயன்படுத்தக் கூடாது

  • சித்த மருத்துவர்கள் மேற்பார்வையில் வழங்கப்படும் நிலவேம்பு, கபசுரக் குடிநீர் அருந்துதல் நலம்.

  • காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ முகாம்கள் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும்.

  • குளங்கள் மற்றும் திறந்தவெளி கிணறுகளில் இருந்து, தனியார் டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதை பார்க்க நேர்ந்தால், உடனடியாக 104ல், பொது சுகாதார கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும். ஏனெனில் சுத்திகரிக்கப்படாத தண்ணீர் பாதுகாப்பானது அல்ல.

  • வெள்ள பாதிப்பு பகுதி களுக்கு தேவையின்றி போகக்கூடாது. தேங்கிய மழை நீர் மற்றும் குப்பையை, உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக அகற்ற வேண்டும்.

  • துாய்மை பணியாளர்களுக்கு உரிய முக கவசம், கை மற்றும் காலுறைகள் வழங்க வேண்டும்

  • சரியான அளவில் குளோரின் கலந்த குடிநீரை குடிக்க பயன்படுத்துவதை, சென்னை குடிநீர் வாரியம், தமிழ்நாடு குடிநீர் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும்

  • தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள மக்கள், முகாமில் தரப்படும் குடிநீரை மட்டுமே அருந்த வேண்டும் .

  • தற்காலிக முகாம்களில், கொரோனா தடுப்பு முறைகள் முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்

ஈக்கள் கட்டுப்பாடு

குப்பை மற்றும் அழுகிய பொருட்களில் ஈக்கள் உற்பத்தியாகின்றன. எனவே, உள்ளாட்சி அமைப்புகள் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்; அந்த இடங்களில் பிளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு வைத்து, கிருமி நீக்கம் செய்ய வேண்டும். மழை நீர் தேங்கும் வகையில் உள்ள தேவையற்ற பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும்

உள்ளாட்சி அமைப்புகளுடன், பொது சுகாதாரத்துறை இணைந்து, மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களை உருவாக்கும் கொசு உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும் படிக்க

கொரோனாவைக் குணப்படுத்த வந்தாச்சு மாத்திரை: பிரிட்டனில் அனுமதி!
டெங்கு காய்ச்சல்: நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

English Summary: The public should drink hot water: Government request
Published on: 13 November 2021, 09:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now