News

Tuesday, 05 September 2023 01:48 PM , by: Muthukrishnan Murugan

The Role of 65 Fisheries Inspectors selected by TNPSC

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.9.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக மீன்துறை ஆய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

மீன்வளத்தை பாதுகாத்தல், நிலைக்கத்தக்க மீன்பிடிப்பு, மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல், மீன்பிடி படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்பிடி இடத்திலிருந்து அதன் நுகர்வு வரை சுகாதாரமான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வதையும் அடிப்படையாக கொண்டு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், கரையோர வசதிகள், மீன் சந்தைகள் போன்ற நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மீன்பிடி தடைகாலங்களில் மீனவர்களுக்கு நிதியுதவி, மீன்பிடி படகுகளுக்கு வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் வழங்குதல், பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்குதல், புதிய சூரை மீன்பிடி தூண்டில் மற்றும் செவுள் வலை விசைப்படகுகளை வாங்கிட மீனவர்களுக்கு 50 விழுக்காடு மானியம் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

மீனவ மக்களின் நல்வாழ்விற்காக தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை மீனவ மக்களிடம் கொண்டு சேர்த்தல், மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குதல், கடல் மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களுக்கான சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டங்களை செயல்படுத்துதல், மீன்பிடித் தடைக்கால நிவாரண உதவித்தொகை வழங்குதல், மீன்பிடி கலன்களை பதிவு செய்தல் மற்றும் உரிமம் வழங்குதல், கடல் மீன் வளர்ப்பு / கூண்டு வளர்ப்பை ஊக்குவித்தல், நவீன மீன்பிடி முறைகளில் பயிற்சி அளித்தல் போன்ற பல்வேறு பணிகளில் மீன்துறை ஆய்வாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

இத்தகைய முக்கியவத்துவம் வாய்ந்த மீன்துறை ஆய்வாளர் பணிகள் தொய்வின்றி நடைபெற மீன்துறை ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு நடத்தப்பட்டு 65 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மீன்துறை ஆய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 65 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் இன்று 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் ந.கௌதமன், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா இ.ஆப, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் டாக்டர்.கே.சு.பழனிசாமி, இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் காண்க:

6 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வறட்சி நிவாரண நிதி

e-NAM திட்டம் குறித்து தோட்டக்கலைத் துறை விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)