News

Monday, 05 September 2022 10:48 AM , by: R. Balakrishnan

School

தமிழகத்தில் மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையே நல்ல புரிதல் ஏற்படும் வகையில் எவ்வாறு மாணவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே மாணவர்களின் மன உளைச்சலை தவிர்க்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றை நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்துகிறது.

உள்ளுறை பயிற்சி(Indoor training)

பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் வினை இயக்குனர்கள், முதன்மை, மாவட்ட மற்றும் வட்டார கல்வி அதிகாரிகள், பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என சுமார் 12,000 பேருக்கு பணி திறன் மேம்பாடு, தலைமை திறன் மற்றும் மேலாண்மை தொடர்பாக ஒவ்வொரு வருடமும் உள்ளுறை பயிற்சி வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த கல்வியாண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தலைமை பண்பு பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 7 முதல் 28 ஆம் தேதி வரை சென்னையில் நேரடி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

இந்நிலையில் பயிற்சியில் பங்கேற்க வேண்டிய தலைமை ஆசிரியர்கள் தவறாமல் பங்கேற்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த பள்ளி கல்வித்துறை உத்தரவைத்துள்ளது.

மேலும் படிக்க

தமிழக மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்: நாளை முதல் தொடக்கம்!

ரயில்களை போல பேருந்துகளில் புதிய வசதி: விரைவில் அறிமுகம்.!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)