தமிழகத்தில் வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.
அதேநேரத்தில் 100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டிருப்பது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
அத்தியாவசியப் பொருட்களுக்கும் அதிக ஜிஎஸ்டி என மத்திய அரசு ஒருபுறம், நடுத்தர மற்றும் ஏழை மக்களை சிரமப்படுத்துகிறது என்றால், மறுபுறம் தமிழக அரசும் மின் கட்டணத்தை உயர்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது.
இலவச மின்சாரம்
தமிழகத்தில் விரைவில் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சில மாதங்களுக்கு முன்பே ஷாக் தகவலை தெரிவித்திருந்தன. அந்த தகவலை மெய்ப்பிக்கும் வகையில் தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
இதன்படி வீடு மற்றும் குடிசைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இவவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும். இதேபோன்று விசைத்தறிகளுக்கான 750 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கும் திட்டமும் தொடரும்.
முன்வந்து ஒப்படைக்கலாம்
100 இலவச மின்சாரம் வேண்டாம் என்று விரும்பினால், அதுகுறித்து நுகர்வோர் தாமாக முன்வந்து அரதுக்கு தெரிவிக்கலாம் என்று அமைச்சர் செந்தில பாலாஜி அறிவித்துள்ளார்.
எவ்வளவு உயருகிறது?
அதேசமயம், 100 -200 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோர் கூடுதலாக 27.50 ரூபாய் செலுத்தும் வகையில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. மேலும், 300 -400 யூனிட் வரை உபயோகிக்கும் நுகர்வோர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 147.50 ரூபாய் அதிகமாக செலுத்தும் விதத்தில் கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...