
வீடுகளில் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு மானியம் வழங்கும் திட்டம் இந்த மாதத்தில் செயல்பாட்டுக்கு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சூரிய ஒளி மின்சார உற்பத்தியை (Solar power generation) அதிகரிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வீடுகளின் மாடியில் சூரிய ஒளி மின்சார உற்பத்தியை ஊக்குவிக்க மானியம் (Subsidy) வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை புதுச்சேரியில் இந்தாண்டு இறுதிக்குள் செயல்படுத்தி முடிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
40% மானியம்:
சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தில், 1 கிலோ வாட்டில் இருந்து, 3 கிலோ வாட் வரையிலான சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு மொத்த செலவில் 40 சதவீதம் மானியமாக (40% Subsidy) வழங்கப்பட உள்ளது. மீதியுள்ள 60 சதவீத தொகையை பயனாளிகள் முதலீடு (invest) செய்ய வேண்டும். மேலும், 3 கிலோ வாட்டுக்கு மேல், 10 கிலோ வாட் வரை கூடுதலாக 20 சதவீதம் மானியம் (20% Subsidy) வழங்கப்படும். வீட்டின் மாடியில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தியது போக மீதமுள்ள உபரி மின்சாரத்தை (Excess electricity) மின்துறை தொகுப்புக்கு வழங்கலாம். இதற்கான தொகை கணக்கில் வைத்துக் கொள்ளப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த, வீட்டின் மாடியில் சோலார் கருவிகளை பொருத்தி மின் நிலையத்தை அமைத்து தரும் நிறுவனங்களை தேர்வு செய்யும் பணிகளை மின்துறை (Electricity Department) மேற்கொண்டுள்ளது. டெண்டர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
தேர்வு செய்யப்படும் சோலார் நிறுவனங்கள் பட்டியல் வெளியிடப்பட்டவுடன், ஆன் லைன் மூலமாக விண்ணப்பங்கள் (Applications) பெறப்பட உள்ளது. இதற்காக, மின்துறையில் வெப் போர்ட்டல் (Web Portal) தயார் செய்யப்பட்டு விட்டது. வீடுகளின் மாடியில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை இந்த மாத இறுதிக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் இலக்குடன் பணிகளை மின்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
மக்களுக்கு அழைப்பு
வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்ய மானியம் வழங்கும் திட்டத்தை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். குறிப்பிட்ட ஆண்டுகளில் முதலீடு (Invest) செய்த தொகை கிடைத்து விடும். பொருத்தப்படும் சோலார் பேனல்களை (Solar Panel) நல்ல முறையில் பராமரித்தால் அதிக பட்சம் 20 ஆண்டுகள் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.
முரளி,
கண்காணிப்பு பொறியாளர் நிலை -1,
மின்துறை.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வறண்டு போனாலும், தண்ணீர் நின்றாலும் நிரந்தர வருமானம் தரும் கோரை சாகுபடி!