மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 December, 2020 8:30 PM IST
Credit : Dinamalar

வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் (Burevi storm), 25 கி.மீ., வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது 15 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் (Meteorological Center) தெரிவித்துள்ளது.

புரெவி புயலின் வேகம் குறைவு:

புரெவி புயலானது பாம்பனுக்கு கிழக்கு தென்கிழக்கே 420 கி.மீ., தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு வடகிழக்கே 600 கி.மீ., தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்த புயலானது மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து இரவு இலங்கையைக் (Srilanka) கடந்து நாளை காலை மன்னார் வளைகுடா (Gulf of Mannar) பகுதியாக குமரிக்கடல் பகுதிக்கு வரக்கூடும். தற்போது புயலானது 18 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது.

கனமழை:

ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய அதிகனமழையும், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை காரைக்கால் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் (Heavy rain) செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதிகனமழை பெய்யக்கூடும்.தரைக்காற்று, 45 கி.மீ., முதல் 55 கி.மீ., வரையும், இடையே 65 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். அடுத்த 3 நாட்களுக்கு தென்கிழக்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் (Fishers) செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் (Puviyarasan) கூறினார்.

கரையைக் கடக்கும் புயல்:

வங்கக்கடலில் உருவான புரெவி புயலானது தற்போது 25 கி.மீ., வேகத்தில் நகர்வதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று மாலை அல்லது இரவில் இலங்கையின் திருகோண மலைக்கு வடக்கே கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பனில் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு (Storm warning cage) ஏற்றப்பட்டுள்ளது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

விவசாயிகளே! இது உங்களுக்கு தான்! புயல் காலத்தில், பயிர்களைப் பாதுகாக்க ஆலோசனைகள்!

நிவர் புயலால் பூக்கள் வரத்து குறைவு! விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி!

நிவர் புயலால் அழுகிய சின்ன வெங்காயத்திற்கு இழப்பீடு வழங்கப்படுமா? விவசாயிகள் கோரிக்கை!

English Summary: The speed of the Burevi storm is low! Meteorological Center reports crossing the border tonight!
Published on: 02 December 2020, 08:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now