தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின் ஊரடங்கு உத்தரவை இறுக்கமாக்கி மே 24 முதல் ஊரடங்கு இரண்டு வாரங்கள் என்ற கணக்கில் நீட்டிக்கப்பட்டது.ஜூன் 14 ஆம் தேதி முடிய உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார்.
கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை மெதுவாக குறைகிறது. தமிழ்நாட்டில் தொற்றுநோய் வீதம் இப்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தரவின் அடிப்படையில் முதலமைச்சர் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்.
மேலும் கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்று ஆய்வுகள் கூறும் நிலையில் கொரோனா பாதித்த குழந்தைகளுக்காக சிகிச்சை முறையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவது தேவையில்லை. 6 முதல் 11 வயது வரையிலான குழந்தைகள் பெற்றோர் மற்றும் மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் தேவைப்படும்போது மட்டும் முகக்கவசம் அணிந்தால் போதுமானது.
கொரோனாவின் தாக்கத்தின் விளைவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பல கட்டுப்பாடுகள் கடந்த ஆண்டு முதல் தொடர்கிறது. அதில் ஒன்று முகக்கவசம் அணிவது.இன்று சுகாதார சேவைகள் இயக்குநரகம் வழங்கிய புதிய கோவிட் -19 வழிகாட்டுதல்களின்படி, 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டாம்.
மேலும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் ரெம்டெசிவிர் ஆன்டிவைரல் மருந்தைப் பயன்படுத்தலாம். சி.டி. ஸ்கேனும் அவசியம் என்றால் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதற்கிடையில் நேற்றை நிலவரப்படி தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு தொற்றுநோய்களின் எண்ணிக்கை 17,321 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.கொரோனா பரவல் குறைந்துவிடுட்டாலும், அந்த நிலைமை இறப்பு எண்ணிக்கைகளில் எழவில்லை என்பதே நிதர்சனம்.
மேலும் படிக்க:
கோவிட்-19 : வெளிநாட்டு தடுப்பூசிகளை இந்தியாவில் அவசரத்தேவைக்காக பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல்!!
ஒரே நிமிடத்தில் cowin.gov.in தளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்வது எப்படி?