News

Sunday, 22 August 2021 07:48 AM , by: R. Balakrishnan

Tallest Herb Garden

இந்தியாவின் மிக உயரமான மூலிகைத் தோட்டம், உத்தரகாண்ட் மாநிலத்தில் திறந்து வைக்கப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளது சமோலி மாவட்டம். இந்தியாவின் கடைசி கிராமமான மணா என்ற பகுதி இங்கு தான் அமைந்துள்ளது. இக்கிராமம் இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் உள்ளது.

புகழ் பெற்ற பத்ரிநாத் கோயிலும் இதன் அருகில் தான் உள்ளது. இதுபோல், பல்வேறு முக்கியத்துவம் கொண்ட மணாவில் மூலிகைத் தோட்டம் (Herbal Garden) அமைக்க உத்தரகாண்ட் அரசு முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. அதன்படி, ஒன்றிய அரசு நிதி உதவியின் கீழ், இந்த கிராமத்தில் 3 ஏக்கர் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

மூலிகைகளை பயிரிடும் தோட்டம் மூலிகைத் தோட்டம் ஆகும். உணவுக்கு, மருந்துக்கு, நறுமணத்துக்கு மூலிகைகள் பயன்படுகிற்ன. குறிப்பாக சித்த மருத்துவம் பல் வகை மூலிகைகளை பயன்படுத்துகிறது. வீட்டில் சிறு மூலிகைத் தோட்டம் செய்தால் விலை உயர்வு மிக்க மருந்துகளை தவிர்க்கலாம்.

உயரமான மூலிகைத் தோட்டம்

‘இந்த மூலிகைத் தோட்டம் 11 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளதால், இந்தியாவின் மிக உயரமான மூலிகைத் தோட்டம் என்ற பெருமையை இப்பூங்கா பெற்றுள்ளது. பல்வேறு அபூர்வ மூலிகைகளை கொண்டு 4 பிரிவுகளாக பூங்கா அமைந்துள்ளது. குறிப்பாக, இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் பகுதியில் கிடைக்கும் 40 வகையான மூலிகைகள் இங்கு நடப்பட்டுள்ளது.

ஆன்மிகமும், அறிவியலும் கொண்ட பத்ரி துளசி, போஜ்புத்ரா மரங்கள் போன்றவையும் இங்கு பராமரிக்கப்படுகின்றன,’ என்று மூத்த வன பாதுகாப்பு அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க

புத்துணர்ச்சி ஊட்டும் செர்ரி பழத்தின் நன்மைகள்!

காட்டுப்பன்றிகளை விரட்ட இயற்கை வழிமுறை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)