News

Friday, 09 August 2019 11:55 AM

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பல்வேறு துறை சார்ந்த இளங்கலை, முதுகலை போன்ற பட்ட படிப்புகளை கற்பித்தது வருகிறது. அதுமட்டுமல்லது விவாசகிகள் மற்றும் வேளாண்மை பற்றி அறிய அல்லது கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் பயன் பெறும் வகையில், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வியினை வழங்கி வருகிறது. இதில் 9 முதுநிலை பட்டயப் படிப்புகளும், 18 சான்றிதழ் படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

2019-20-ம் கல்வியாண்டில் புதிதாக மேலும் 30 படிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருபவர்களும் இணைந்து பயன் பெற்று கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வழங்க பட உள்ள 30 புதிய படிப்புகளின் விவரங்கள் பின்வருமாறு

பிஜி டிப்ளமோ / முதுநிலை பட்டயப் படிப்பு (9 படிப்புகள்)

  • மூலிகைப் பயிர்கள் உற்பத்தி
  • தரக்கட்டுப்பாடு மற்றும் சந்தைப் படுத்துதல்
  • தேயிலைத் தோட்ட மேலாண்மை
  • கிராமப்புற வங்கி மற்றும் நிதி
  • சுற்றுச்சூழல் மேலாண்மை
  • கரும்பு தொழில் நுட்பங்கள்
  • தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள்
  • வணிக ரீதியில் உயிரியல் பூச்சி மற்றும் நோய்க்கொல்லிகள் உற்பத்தி
  • அங்கக வேளாண்மை
  • பசுமைக் குடில் சாகுபடி

டிப்ளமோ/ பட்டயப் படிப்பு

  • வேளாண் இடுபொருள் படிப்பு

வேளாண்மை சார்ந்த சான்றிதழ் படிப்பு (22 புதிய படிப்புகள்)

  • இயற்கை பண்ணையம்
  • பட்டுப் புழுவியல்
  • நவீன பாசன மேலாண்மை
  • தேனீ வளர்ப்பு
  • கரும்பு உற்பத்தி தொழில்நுட்பம்
  • காளான் சாகுபடி
  • பேக்கரி பொருட்கள் தயாரிப்பு
  • தென்னை உற்பத்தி தொழில்நுட்பம்
  • மருத்துவ தாவரங்கள்
  • வேளாண் உபகரணங்கள்
  • கருவிகள் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு
  • தோட்டக்கலை பயிர்களில் பண்ணை தொழில்நுட்பம்
  • பழங்கள் மற்றும் காய்கறி பயிர் பாதுகாப்பு
  • காய்கறி விதை உற்பத்தி
  • பருத்தி உற்பத்தி தொழில்நுட்பம்
  • வீரியரக பருத்தி
  • சோள விதை உற்பத்தி
  • மலர் சாகுபடி
  • களை மேலாண்மை
  • சிறு தானிய உற்பத்தி மற்றும் மதிப்புக் கூட்டிய பொருட்கள்
  • வேதிப்பொருட்கள் மற்றும் நச்சு மேலாண்மை
  • தேயிலை உற்பத்தி தொழில்நுட்பம்

அடிப்படைத்  தகுதி மற்றும் கட்டணம் பற்றிய விவரங்கள்

முதுநிலை பட்டயப் படிப்பு

இப்படிப்பில் சேர விரும்புவோர் ஏதேனும் ஓர் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.  வேளாண்மை சார்ந்த துறைகளில் பணியாற்று வருபவர்களுக்கு இப்படிப்பு பயனுள்ளதாக இருக்கும். ஆண்டுக்கு இருமுறை செமஸ்டர் தேர்வு நடத்தப்படும். இதற்கான  கட்டணம் தலா ரூ.13 ஆயிரம் ஆகும். 

வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு

இது  இடுபொருள் விற்பனையாளர்களுக்கான பட்டயப் படிப்பு ஆகும். எஸ்எஸ்எல்சி முடித் தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஓராண்டிற்கான கட்டணமாக ரூ.25,000 செலுத்தி செமஸ்டர் தேர்வு எழுத வேண்டும்.

சான்றிதழ் படிப்பு

விவசாயிகள், விவசாயம் சார்ந்த துறையினரின் தேவைக்கேற்ப இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது 6 மாதகால படிப்பாகும், கட்டணமாக  ரூ.2 ஆயிரம் செலுத்தி சேரலாம். எழுத, படிக்க தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் இதில் சேரலாம். இது குறித்த விவரங்களை https://sites.google.com/a/tnau.ac.in/department-of-open-and-distance-education-learning/ என்ற இணையதளத்தில் குறிப்பிடப் பட்டுள்ளன.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)