கிளியனுார் அருகே பழுதடைந்த சாலையை 10.50 லட்சம் ரூபாய் செலவில் புதிய சிமென்ட் சாலையாக அமைத்துக் கொடுத்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
ஊரடங்கு (Curfew)
விழுப்புரம் மாவட்டம் வானுார் தொகுதி கிளியனுாரில் இருந்து 5 கி.மீ.யில் உள்ளது நல்லாவூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சந்திரசேகரன் வயது 31. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய சந்திரசேகரன் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்தார்.
தன் கிராமத்தில் ஈஸ்வரன் கோவில் தெருவின் சாலை மழையால் சேதமடைந்து சேரும் சகதியுமாக இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அந்த சாலையை சரி செய்து தரக்கோரி மார்ச் மாதம் வானுார் பி.டி.ஓ. அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.
சிமெண்ட் சாலை (Cement Road)
'தற்போது நிதி இல்லை' என அதிகாரிகள் கைவிரித்துள்ளனர். இதனால் பழுதடைந்த சாலையில் புதிய தார் சாலை அமைக்க எவ்வளவு நிதி செலவாகும் எனக் கேட்டு அதற்கான தொகையை தானே முன் வந்து கொடுத்து செய்து தருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் கலெக்டரிடம் அனுமதி பெற்ற சந்திரசேகரன் தன் சொந்த செலவில் 10 லட்ச ரூபாய் செலவில் சிமென்ட் சாலை அமைத்துக் கொடுத்துள்ளார்.
அரசின் நிதியுதவி இன்றி தன் சொந்த செலவில் சிமென்ட் சாலை அமைத்துக் கொடுத்த கிராம இளைஞரை அப்பகுதி மக்கள் மட்டுமின்றி அனைவரும் பாராட்டுகின்றனர்.
மேலும் படிக்க
ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டுமே இன்சூரன்ஸ்: ஐகோர்ட் அதிரடி!
இனி சுங்கச்சாவடிக்கு வேலையில்லை: வரப்போகுது நம்பர் பிளேட் ரீடர்!