பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 27 July, 2022 6:22 PM IST
Thiruthani Murugar Temple

திருத்தணி முருகன் கோவிலில், ஆடி கிருத்திகை விழா மற்றும் மூன்று நாள் நடந்த தெப்ப திருவிழாவில் குவிந்த 9 லட்சம் கிலோ பூ மாலை மற்றும் குப்பையை, நகராட்சி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தரம் பிரித்து அனுப்ப திட்டமிட்டு உள்ளனர். குப்பை கழிவில் இருந்து மின்சாரம், இயற்கை உரம் தயாரிக்கும் பணியில் நகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

ஆடிக் கிருத்திகை (Aadi Krithikai)

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில் நடப்பாண்டிற்கான ஆடி கிருத்திகை விழா, இம்மாதம் 21ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை நடந்தது. இவ்விழாவில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் வந்து, தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.தவிர இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், சாதாரணமாக வந்து மலைக்கோவிலில், பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதில், 23 - 25ம் தேதி வரை மூன்று நாள் தெப்பத் திருவிழா நடந்தது. தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, பக்தர்கள் காவடிகளுடன், மலைக்கோவிலுக்கு வந்து பல மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.இரவு சரவணபொய்கையில் நடந்த தெப்பத் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தின் படிகளில் அமர்ந்து, உற்சவர் முருகப் பெருமானை தரிசித்தனர்.

ஆடி கிருத்திகைக்கு வந்த பக்தர்கள் அனைவரும் மலர், மயில் காவடி ஆகியவற்றை தான் அதிகளவில் சுமந்து வந்தனர். மேலும், மலையடி வாரத்தில் உள்ள சரவணபொய்கை, நல்லாங்குளம் ஆகிய இடங்களில் காவடிகளுடன் வந்த பக்தர்கள், குளத்தில் புனித நீராடி, வீடுகளில் கொண்டு வந்த மலர் மாலைகளை கழற்றி, புதிய மலர் மாலைகளுடன் காவடிகளுக்கு பூஜை போட்டு, மலைக்கோவிலுக்கு சென்றனர். காவடி மண்டபத்தில் நேர்த்தி கடனை செலுத்திய பின், காவடிகளில் இருந்த மலர் மாலைகளை, பக்தர்கள் கழற்றி வீசினர்.

சுகாதாரம் (Hygiene)

இந்த பூ மாலைகளை, கோவில் சார்பில் நியமிக்கப்பட்ட பத்மாவதி ஒப்பந்த ஊழியர்கள் 300 பேரும், திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி நகராட்சி ஊழியர்கள், ஆவடி மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்கள் 300 பேரும் என மொத்தம், 600 பேர் சேர்ந்து சேகரித்து அகற்றினர். ஆடி கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா ஆகிய ஐந்து நாட்கள் மட்டும், 9 லட்சம் கிலோ பூ மாலை மற்றும் குப்பை அகற்றப்பட்டு, பிளீச்சிங் பவுடர் துாவி சுகாதாரம் பாதுகாத்தனர். அதேபோல், ஆடிப் பரணி மற்றும் ஆடி கிருத்திகை ஆகிய நாட்களில் மட்டும், 300க்கும் மேற்பட்ட இடங்களில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.அந்த வகையில் சேர்ந்த வாழை இலை, தட்டுகள் என, 50 ஆயிரம் கிலோ குப்பையையும் நகராட்சி, கோவில் ஊழியர்கள் அதிரடியாக அகற்றினர்.

9 லட்சம் கிலோ குப்பை (9 lkh kg Waste)

திருத்தணி முருகன் கோவிலில் நடந்த ஆடி கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழாவில், 6.50 லட்சம் கிலோ பூ மாலை மற்றும் காவடி கூடைகள் சேகரிக்கப்பட்டன. தவிர, 2 லட்சம் கிலோ வாழை இலை, பாக்கு மட்டை, பேப்பர் டம்ளர் போன்ற குப்பை; 50 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் கவர், டம்ளர் மற்றும் வாட்டர் கேன் போன்ற கழிவுகள் என, மொத்தம், 9 லட்சம் கிலோ குப்பையை, நகராட்சி நிர்வாகம் மற்றும் கோவில் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், உடனுக்குடன் அகற்றினர்.

உரம் தயாரிப்பு (Compost Production)

மக்கும் குப்பையான பூ மாலை, வாழை இலை ஆகியவை தனியாக பிரித்து, நகராட்சியில் உள்ள உரக் கிடங்கிற்கு அனுப்ப முடிவு செய்து உள்ளனர். காய்கறி கழிவுகளை, மின்சாரம் தயாரிக்கும் பிரிவுக்கு அனுப்ப உள்ளனர். மறுசுழற்சி செய்யும் பிளாஸ்டிக் கழிவுகளை, துாய்மை பணியாளர்கள் எடுத்து சென்று, பிளாஸ்டிக் பொருட்கள் தயார் செய்யும் கம்பெனிகளுக்கு விற்க அறிவுறுத்தப்பட்டது.ஒரு முறை பயன்படுத்திவிட்டு துாக்கி எறியப்படும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கவர்கள் தனியாக பிரித்து, சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்ப உள்ளனர்.கடந்த 2019ம் ஆண்டு ஆடி கிருத்திகையின் போது, மொத்தம், 10 லட்சம் கிலோ பூ மாலை, வாழை இலை போன்ற குப்பை சேகரிக்கப்பட்டது. பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும், ஒரு லட்சம் கிலோ இருந்தது.தற்போது ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆடி கிருத்திகை விழாவில், குறைந்த அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் வந்துள்ளன.

மேலும் படிக்க

கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், விவசாயிகள் போனில் புகார் அளிக்கலாம்!

சென்னையில் வீகன் திருவிழா: சைவப் பிரியர்களுக்கு வரவேற்பு!

English Summary: Thiruthani Aadi Krithikai: 9 lakh kg of waste composting project!
Published on: 27 July 2022, 06:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now