சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் சக்கரபாணி ஆகியோர் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரிய கருப்பண்ணன்: 'பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்க முதல்வர் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பினை நிறைவேற்றுகின்ற பொறுப்பு உணவுத்துறைக்கும், கூட்டுறவு துறைக்கும் உள்ளதாகவும் அது பற்றிய நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றது என்பதை ஆய்வு செய்தோம் என கூறினார்.
பொங்கல் பரிசு டோக்கன் (Pongal Gift Token)
அனைத்து கடைகளிலும் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.. 8ம் தேதி வரை இந்த டோக்கன் விநியோகம் நடைபெற உள்ளது.. 9ம் தேதி, முதல்வர் சென்னையில் ஏதாவது ஒரு இடத்தில் இந்தத் திட்டத்தை தொடங்க உள்ளார்.. தமிழகத்தில் இருக்கக்கூடிய 35 ஆயிரம் நியாய விலை கடைகளில் தற்போது 4,45 கடைகள் ஐஎஸ்ஓ தரச் சான்று பெற்ற கடைகளாக உயர்த்தப்பட்டுள்ளன.. எஞ்சிய கடைகள் தமிழகம் முழுவதும் 2 ஆண்டு காலத்திற்குள் படிப்படியாக இதே தரத்தில் மேம்படுத்தப்படும்.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட வர இயலாதவர்கள் 'பவர்' கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு பயோ மெட்ரிக் முறை கட்டாயம். அதில் சுட்டிக்காட்டும் அளவிற்கு ஏதாவது தவறு நடந்திருந்தால் ஆதாரத்துடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ரேஷன் கடையில் ராகி (Ragi in Ration)
இதையடுத்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பைலட் முறையில் ராகி விநியோகிக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.. தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ராகி கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. அதன் பிறகு விரைவில் அந்த 2 மாவட்டங்களிலும் அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ ராகி வழங்கப்படும் என்று மீண்டும் உறுதி தந்துள்ளார்.
மேலும் படிக்க
விவசாயிகளுக்கு ரூ.10,000 வரை ஊக்கத்தொகை: உடனே விண்ணப்பிக்கவும்!