நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குஎண்ணிக்கையை முன்னிட்டுத் தமிழகத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செவ்வாய்கிழமை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மதுப்பிரியிர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன. அவற்றில் 3-ல் ஒரு பங்கு கடைகள் அதாவது சுமார் 1,700 கடைகள் பிப்ரவரி 22ம் தேதி அடைக்கப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் உள்ள 1,700 டாஸ்மாக் மதுக்கடைகள் நாளை மூடப்படுகின்றன
முன்னதாக கடந்த 19ம் தேதி நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகள் ஓட்டுப்பதிவுக்கு முந்தைய 3 நாட்கள் அடைக்கப்பட்டன.
அதாவது 19-ந் தேதி வரை 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறக் கூடிய பகுதிகளில் உள்ள கடைகளை மட்டும் மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி தேர்தல் நடைபெற்ற பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் கடந்த 16-ந் தேதி இரவு 10 மணியுடன் மூடப்பட்டன. அதன் பின்னர் 2ம் தேதி திறக்கப்பட்டன.
இந்நிலையில் செவ்வாய்கிழமை அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், வாக்கு எண்ணக்கூடிய மையங்களுக்கு 5 கி.மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகள், பார்களை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி மதுக்கடைகள் மூடப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சென்னையில் 15 இடங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது.
அதனால் அந்த பகுதிகளில் இன்று இரவு 10 மணிவரை மட்டுமே மதுக்கடைகள் செயல்படும். எனவே மீண்டும் மதுக்கடைகள் மூடப்படுவதால் மது பிரியர்கள் பலர் ஆர்வமாக மதுபானத்தை வாங்கிக் கையிருப்பு வைத்துக் கொண்டனர்.
இது குறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகின்ற பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி 22ம் தேதி 3-ல் ஒரு பங்கு கடைகள் அடைக்கப்படுகின்றன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்று அந்தந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கு கடைகளை மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன. அவற்றில் 3-ல் ஒரு பங்கு கடைகள் அதாவது சுமார் 1,700 கடைகள் செவ்வாய் கிழமை அடைக்கப்படுகின்றன.
மேலும் படிக்க...
புஷ்பா திரைப்படத்திற்கு தாதாசாஹேப் பால்கே விருது!
புழக்கத்தில் போலித் தங்கம்- தரத்தைப் பரிசோதிக்க எளிய வழிகள்!