News

Wednesday, 25 May 2022 05:29 PM , by: T. Vigneshwaran

Sugarcane Farmers

சர்க்கரை விலையை கட்டுக்குள் வைக்கும் விதமாக சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ரஷியா-உக்ரைன் போர் காரணமாக விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டு, சர்க்கரைக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. உள்நாட்டில் போதிய அளவில் சர்க்கரை கையிருப்பை உறுதி செய்யவும், சர்க்கரை விலையை கட்டுக்குள் வைக்கவும், அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி வரும் ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து, எந்த சர்க்கரை ஏற்றுமதியாக இருந்தாலும், அதற்கு உணவு மற்றும் பொது விநியோகத்துறை இயக்குனரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்றுமதி செய்யப்படும் சர்க்கரை குறித்த விவரங்களை உணவு மற்றும் பொது விநியோகத்துறையில் சர்க்கரை ஆலைகள் இணையதளத்தில் அன்றாடம் தெரிவிக்க செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீறும் சர்க்கரை ஆலைகள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டம் மற்றும் சர்க்கரை கட்டுப்பாடு ஆணை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

ஏற்கனவே கோதுமை விலையை கட்டுக்குள் வைக்க, கோதுமை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது சர்க்கரை ஏற்றுமதிக்கும் மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி 8.30 மணிக்கு வழங்கப்படும்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)