மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் கிணற்று பாசனம் மூலம் விவசாயிகள் சிலர் மூன்று போகம் நெல் சாகுபடி செய்கின்றனர்.
கோவை, மதுரை, தஞ்சாவூர், அம்பாசமுத்திரம் வேளாண் கல்லுாரிகள் சார்பில் வீரிய ஒட்டு புதிய நெல் ரகங்களான கோ 43, ஏ.டி.டி.45, அட்சயா, ஏ.எஸ்.18, ஏ.எஸ்.டி. 16, சி.ஆர். 1009, செல்லப்பொன்னி உள்ளிட்டவை 90 முதல் 140 நாட்கள் பயிர்களாக பயிரிடப்படுகின்றன.
மன்னாடிமங்கலம் இப்பகுதியில் 110 நாட்களில் விளையும் செல்லப்பொன்னி நெல்லானது பெருமளவில் பயிரிடப்பட்டுள்ளது. இதில் பூச்சி தாக்குதல் குறைவு. உரம் அதிகம் வைத்தால் பயிர் நிலத்தில் சாய்ந்து விடும். எனவே குறைந்த உரம் போதுமானது. வற்றாத கிணறு இருப்பதால் ஆண்டுக்கு மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. குப்பை உரம், மக்கிய கால்நடை சாணத்தை கலந்து உழவு செய்வதால் பயிருக்கு ஊட்டச்சத்து, நுண்ணுாட்டச்சத்து கிடைக்கிறது.