நியாயவிலைக்கடைகளில் ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்க ஏதுவாகவும், சில்லறைப் பிரச்னைக்குத்தீர்வு காணும் வகையிலும், UPI பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார்.
எவர்சில்வர் கொள்கலன்களில்
இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாநிலம் முழுவதும் ஒரு கிராம பஞ்சாயத்தில் குறைந்தபட்சம் 2 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை எவர்சில்வர் கொள்கலன்களில் வைத்து விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
UPI வசதி
தமிழக நியாயவிலைக் கடைகளில், UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகமாக உள்ளது.அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட சில நியாயவிலைக் கடைகளில் UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை, மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...