News

Wednesday, 14 October 2020 02:56 PM , by: KJ Staff

Credit : Hindu Tamil

துவரம்  பருப்பின் விலை தற்போது உயர்ந்து வரும் நிலையில், ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, பிகார் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பருப்பு வகைகளின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக, ஒரு லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பைக் விடுவிக்க, மத்திய அரசை (Central government) கோரியுள்ளன.

விலை உயர்வு:

துவரை மற்றும் உளுந்தின் (Black-gram) அறுவடை காலம் நெருங்கி வந்த போதிலும், கடந்த சில நாட்களாக, இந்த பருப்பு வகைகளின் சில்லறை விலை, கடந்த ஆண்டை விட பெருமளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அக்டோபர் 12 வரை நாடெங்கும் துவரம் பருப்பின் விலை 23.71 சதவீதமாகவும், உளுத்தம் பருப்பின் விலை 39.10 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

Credit: Dinakaran

1 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு:

மத்திய நுகர்வோர் நல அமைச்சகத்தின் (Federal Ministry of Consumer Welfare) சில்லறை விலையை குறைக்கும் முயற்சியாக, துவரம் பருப்பு ஒரு கிலோ 85 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதுவரை ஆந்திரப் பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, பிகார் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள், பருப்பு வகைகளின் விலையை, கட்டுப்படுத்தும் விதமாக சுமார் ஒரு லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பைக் கோரியுள்ளன.

திறந்த வெளிச் சந்தையில் விற்பனை:

நாட்டின் மற்ற மாநிலங்களும், வரும் நாட்களில் இது போன்று விண்ணப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய நுகர்வோர் நல அமைச்சகம் அதிகரித்து வரும் சில்லறை விலையை (Retail price) கட்டுப்படுத்தும் விதமாக, அதன் கையிருப்பிலிருந்து 40 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பை திறந்த வெளிச் சந்தையில் (Open outdoor market) விற்பனைக்கு கிடைக்கச் செய்ய முடிவு செய்துள்ளது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க...

குறைந்தபட்ச ஆதரவு விலையில் அவரை, கொப்பரை, பருத்திக்கொட்டை கொள்முதல்! மத்திய அமைச்சகம் தகவல்!

நடப்பாண்டில் வேளாண் ஏற்றுமதி 43.4% அதிகரிப்பு! மத்திய அரசு அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)