தென்மேற்கு பருவ மழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.2 நாட்களில் மட்டும் 400 செ.மீ மழை பதிவாகியுள்ளது, இதன் காரணமாக 35 பேர் பலியாகியுள்ளனர்.
மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு நிலை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக மும்பையில் நேற்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று சுற்றுசுவர்கள் இடிந்து விழுந்ததில் 19 பேர் பலியாகினர், பலர் படுகாயம் அடைந்தனர். மேலும் ரயில் மற்றும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய வானிலை அறிவிப்பின்படி இன்னும் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை அறிவித்துள்ளது.
இதை அடுத்து ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே அணை திடீரென ஒரு பகுதி உடைந்து அணையின் நீர் கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. அணைக்கு அருகே இருந்த 12 வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன மற்றும் 20 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. மொத்தம் 7 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தகவல் அறிந்து (என்டிஆர்எப்) தேசிய பேரிடர் மேம்பாட்டு மையம் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையில் இதுவரை 6 பேர் மீட்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து மீட்பு பனி நடந்து வருகின்றது. என்டிஆர்எப், தீ தடுப்பு குழு, போலீஸார், தொண்டு நிறுவன பணியாளர்கள், பொதுமக்கள் இணைத்து ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான் இடங்களுக்கு மாற்றப் பட்டு வருகின்றனர்.
K.Sakthipriya
Krishi Jagran