தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (14 மார்ச் 2023) தலைமைச் செயலகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திடவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் "தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023" (Tamil Nadu Organic Farming Policy 2023) வெளியிட்டார்.
பண்ணை விளைபொருட்களுக்கு தமிழ்நாடு ஆர்கானிக் சான்றிதழ் துறை (TNOCD) வழங்கும் அங்கீகாரம், இப்போது கால்நடைகள் மற்றும் கோழிப் பொருட்கள், தேனீ வளர்ப்பு , அக்வா வளர்ப்பு, காளான் வளர்ப்பு மற்றும் பாலி கிரீன்ஹவுஸ் உற்பத்திக்கும் விரிவுபடுத்தப்படும். தமிழ்நாடு இயற்கை வேளாண்மைக் கொள்கை 2023, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை எளிதாக்க ஒற்றைச் சாளர முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
2.திருச்சி வேளாண் மக்களுக்கு கொப்பரை தேங்காய் MSP குறித்து அறிவிப்பு!
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஏப்ரல் 2023 மாதம் முதல் செப்டம்பர் 2023 வரை அரவைக்கொப்பரை கொள்முதல் செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள், துவரங்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை அணுகி நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களைக் கொண்டு பதிவு செய்து தங்களது கொப்பரை தேங்காயினை விற்பனை செய்து பயனடையலாம். தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல இலாபகரமான விலை கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள, இத்திட்டத்தினை தென்னை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயப் பெருமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு திரு.த.உதயகுமார், மேற்பார்வையாளர், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், துவரங்குறிச்சி என்ற முகவரியிலும், தொடர்புக்கு 8012025720 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்
3.சிறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வேளாண் அமைச்சர் பேச்சு
தனியார் நிறுவனத்தின் சேனலையும் அதன் இணையதளத்தையும் தொடங்கி வைத்த பின்னர் நடந்த நிகழ்வில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தொமர் பேசியதாவது, விவசாய சமூகத்தில் 85% சிறு விவசாயிகள் இருப்பதாகவும், அவர்கள் தனியார் முதலீடு இல்லாத சவாலை எதிர்கொள்வதாகவும் கூறினார். "விவசாயம் இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு மற்றும் பண்ணை சுற்றுச்சூழல் அமைப்பு இந்திய பொருளாதாரத்தின் முக்கிய தூண்" என்று அவர் கூறினார். மேலும், சிறு விவசாயிகளின் பொருளாதாரத் திறனை உயர்த்துவதற்காக ₹6,865 கோடி செலவில் 10,000 விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) உருவாக்கும் லட்சியத் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாகவும் தோமர் தெரிவித்தார்.
மேலும் படிக்க: நிலக்கடலையில் மகசூல் அதிகரிக்கும் முறை - எப்படி?
4.ஏற்காடு திருவிழாவை முன்னிட்டு சேலம் தோட்டக்கலைத்துறை ஆயத்தம்
ஏற்காடு திருவிழாவை முன்னிட்டு சேலம் தோட்டக்கலைத்துறை ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து, தோட்டக்கலை அலுவலர் வி.திவ்யதர்ஷினி கூறுகையில், மலர் கண்காட்சி மற்றும் மலர் கண்காட்சிக்காக மலர் மரக்கன்றுகளை வளர்ப்பது வழக்கம். 44 வகையான மலர் மரக்கன்றுகளில் இருந்து 2.5 லட்சம் பூக்கள் கிடைக்கும் என்றார் அவர். திசு வளர்ப்பு முறையில் வளர்க்கப்படும் 40 வகையான டேலியா மலர் மரக்கன்றுகளும் தங்களிடம் இருப்பதாகவும் அவர் கூறினார். டேலியா மலர் ஏற்காட்டில் மிகவும் பிரபலமானது, அந்த பூவை 'ஏற்காடு ரோஸ்' என்றும் அழைப்பர். "சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பார்வையாளர்கள் வழக்கமாக டேலியா மலர் கன்றுகளை வாங்குவது வழக்கம், அதற்காக ஒவ்வொரு ஆண்டும் புதிய வண்ண மலர்களை அறிமுகப்படுத்துவோம்," என்று அவர் கூறினார்.
5.விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம்: கோயம்புத்தூரில் நாள் மற்றும் நேரம் அறிவிப்பு!
கோயம்புத்தூர் தெற்கு உட்கோட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கான விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டமானது வருகின்ற வெள்ளிக்கிழமை 17 மார்ச் 2023 அன்று காலை 11ச30 மணியளவில் கோயம்புத்தூர் தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோயம்புத்தூர் தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் தெற்கு, சூலூர், மதுக்கரை, பேரூர் ஆகிய வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது விவசாயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு மனுக்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
6.ஒற்றை சாரள முறையில் விவசாயிகள் அரசின் அனைத்துத் திட்டங்கள் பயன்களையும் விரைந்து பெறுவதற்கு சிறப்பு முகாம்
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைசார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண் அடுக்கு திட்டம் வேளாண்மை - உழவர் நலத்துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக GRAINS வலைதளத்தின் மூலம் அரசின் நன்மைகள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதிப்பிடுத்திடவும், ஒற்றை சாளர Single Window Portal முறையில் விவசாயிகள் அனைத்து துறைசார்ந்த திட்டங்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் திட்டப்பலன்களை பெற்றுக்கொள்ளலாம். எனவே, வேளாண் அடுக்கு திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் வரும் மார்ச் மாதத்தில் 16 , 23 மற்றும் 30 ஆம் தேதி ஆகிய தேதிகளில் காலை 10 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் நடைபெறும்.
மேலும் படிக்க:
பூ உதிர்வை தடுக்கும் தேமேர் கரைசல் : தயாரிக்கும் முறை இதோ!
ஹ்யூமிக் அமிலம்: மட்கிய அறிவியல் மற்றும் அது மண்ணுக்கு எவ்வாறு பயனளிக்கும்