News

Tuesday, 21 March 2023 06:00 PM , by: Yuvanesh Sathappan

#tnagribudget 2023-24,Tamil Nadu Agriculture Budget 2023-24

1,தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023-24 ,15 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசம் ,127 லட்சம் மெட்ரிக் டன் தானியங்களை உற்பத்தி செய்ய இலக்கு.

தமிழ்நாட்டு சட்டசபையில் நடப்பாண்டிற்கான (2023-2024) வேளாண் பட்ஜெட்டினை இன்று தாக்கல் செய்யத் தொடங்கினார் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெல்டாவில் 5,36,000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வரலாறு காணாத வகையில் நேரடி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வரும் நடப்பாண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் தானியங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.15 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

2,சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி,நெல்லுக்கு பின்னான பயிர் சாகுபடிக்கு ரூ.24கோடி மானியம்,ஆதி திராவிட பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம்

ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பருவத்திற்கேற்ற பயிர்,தொழிநுட்பம் பற்றிய தகவல்களை உழவர்களுக்கு பகிர்வதற்காக விவசாயிகளை ஒருங்கிணைத்து கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைக்கப்படும்

நெல்லுக்கு பின்னான பயிர் சாகுபடிக்கு ரூ.24கோடி மானியம் , சம்பா நெல் அறுவடைக்கு பின், சிறுதானியங்கள், பயறு உள்ளிட்ட சாகுபடிகளுக்கு ஊக்குவிப்பு.

ஆதி திராவிட பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம்,உயர்மதிப்பு வேளாண் இயந்திரங்கள் உள்ளிட்ட விவசாய கருவிகளுக்கு 20 சதவிகிதம் கூடுதல் மானியம் வழங்க ஆதிதிராவிட சிறு குரு விவசாயிகளுக்கு 10 கோடி ரூபாயும்,பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு 1 கோடி ரூபாயும் ஒதுக்கீடு.

3, மின்னணு உதவிமையங்கள் ,மின்னணு வெளாண்மை திட்டம், ரூ.5 லட்சம் மற்றும் நம்மாழ்வார் விருது

385 வட்டார வேளாண் விரிவாக மையங்களில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உதவியுடன் மின்னணு உதவி மாயன்கள் செயல்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

37 மாவட்டங்கள் 385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள்

விவசாயிகளுக்கு வழங்கப்பெறும் வேளாண் இடுபொருட்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை

சிறப்பாக செயல்படும் அங்கக விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் மற்றும் நம்மாழ்வார் விருது

4, கால்நடை வளர்ப்புக்கு ரூ.50 கொடி நிதி உதவி,பயறு பெருக்குத்திட்டம்,எண்ணெய் வித்துக்களுக்கான சிறப்பு மண்டலம் மற்றும் சிறப்பு திட்டங்கள்

மாடு வளர்ப்பு,ஆடுவளர்ப்பு ,தேனீ வளர்ப்பு போன்ற பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள ரூ.50 கொடி நிதி உதவி நிதி உதவி மற்றும் வட்டியில்லா கடன்

உடலுக்கு தேவையான புரதச்சத்தை வழங்கும் பயறு வகைகளின் பரப்பளவையும் ,உற்பத்தியையும் அதிகரிக்க 30 கோடி ரூபாய் மதிப்பில் பயறுய் பேருக்கு திட்டம்

எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 14மாவட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு மண்டலம்

ரூ.33கோடி நிதி ஒதுக்கீட்டில் சூரிய காந்தி,நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம்

5, 2504 ஊராட்சிகளில் ரூ.230 கோடியில் தானிய உற்பத்திக்கான திட்டம்

2504 ஊராட்சிகளில் ரூ.230 கோடியில் தானிய உற்பத்திக்கான திட்டம் செயல்படுத்தப்படும். கிராமங்கள் தன்னிறைவு பெற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இலவச பம்ப்செட்டுகள், இலவச பண்ணைகுட்டைகள், ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறுகள், உலர்களத்துடன் கூடிய தரம் பிரிப்புக்கூடங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

6, கம்பு, கேழ்வரகினை நியாயவிலை கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்,சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு

சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் செயல்படுத்தப்படும், கம்பு, கேழ்வரகினை நேரடி கொள்முதல் செய்து நியாயவிலை கடைகளில் கிடைப்பதை அரசு உறுதிசெய்யும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தை செயல்படுத்தும் விதமாக ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

7,வேளாண் பட்டதாரிகளுக்கு ரூ. 2 லட்சம் கடன் உதவி, வட்டாரத்துக்கு ஒரு வேளாண் விஞ்ஞானி, உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0

200 வேளாண் பட்டதாரி இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ. 2 லட்சம் கடன் உதவி வழங்கப்படும் எனவும் அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

பயிர் சாகுபடி முதல் விற்பனை வரையிலான தொழிலுட்பம் பற்றிய சந்தேகங்களை விவசாயிகளிடம் நேரடியாக விளக்க வேளாண் விஞ்ஞானிகள் நியமனம்.

3-4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம்

8,தென்னை வளர்ச்சி மேம்பாட்டு திட்டம் ,மதுரை மல்லிகைக்கு இயக்கம், மிளகாய் மண்டலம்

தென்னை வளர்ச்சி மேம்பாட்டிற்கு ரூ.20 கோடி தேசிய அளவில் தென்னை உயிர்ப்பதியில் தமிழ்நாடு முதலிடம் அடைய தென்னை வளர்ச்சி மேம்பாட்டு திட்டம்

இராமநாதபுரத்தில் மல்லிகை செடிகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்யவும், மதுரை, விருதுநகர் ,திண்டுக்கல் ,தேனீ, தென்காசி மாவட்டங்களில் மல்லிகை பயிர் வேளாண்மை முறைகளை விவசாயிகளுக்கு கற்றுத்தரவும் ரூ.7 கோடி ஒதுக்கீடு.

இராமநாதபுரம், விருதுநகர் , சிவகங்கை , தூத்துக்குடி மாவட்டங்களில்
மிளகாய் உற்பத்தியை அதிகரித்திட மிளகாய் மண்டலம் அறிவிப்பு.

9, கரும்புக்கு சிறப்பு ஊக்கத்தொகை,கரும்பு மேம்பாட்டுத்திட்டம் ,கழிவிலிருந்து இயற்கை உரம்

கரும்பு விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும்.

குறைந்த சாகுபடி செலவில் அதிக மகசூல் எடுக்க கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு

சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கழிவு மண்ணிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு

10,நுண்ணீர் பாசனம் நிறுவுவதற்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு, பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறையை பரவலாக்க ரூ.22 கோடி ஒதுக்கீடு

தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் 53400 ஹெக்டர்
நுண்ணீர் பாசன முறையினை நிறுவுவதற்கு மானியமாக ரூ.450 கோடி ஒதுக்கீடு

பசுமை குடில் ,நிழல் வலிக்குடில் அமைத்து உயர்மதிப்புள்ள காய்கறிகள் மற்றும் பூக்கள் ஆண்டு முழுவதும் சாகுபடி

11,விவசாயிகளுக்கு அயல் நாட்டில் பயிற்சி, பருத்தி இயக்கம், நெல் ஜெயராமன் மரபு சார் நெல் ரகங்கள்

வெளிநாட்டு வேளாண் தொழில்நுட்பங்களை தெரிந்து கொண்டு, நமது மாநிலத்தில் பின்பற்றும் வகையில் விவசாயிகள் வெளிநாட்டில் பயிற்சி பெற ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு

நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையில் ரூ.12கோடி நிதி ஒதுக்கீட்டில் பருத்தி இயக்கம்

தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் இரகங்களை பாதுகாத்து பரவலாக்கிட, 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்து, மானிய விலையில் மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு

12, ரூ.2337 கோடி பயிர்காப்பீடு மானியம்,தக்காளி மற்றும் வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க நடவடிக்கை

பயிர் பாதிப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாப்பதற்காக பயிர் காப்பீட்டு திட்டத்தில் மாநில அரசின் காப்பிட்டு கட்டண மானியத்திற்கு நிதி ஒதுக்கீடு

தக்காளி ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ. 19 கோடி ஒதுக்கீடு

வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ. 29 கோடி ஒதுக்கீடு

மேலும் படிக்க

மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டா மாப்பிள்ளையா இருக்கலாம்- பட்ஜெட் உரையில் சிரிப்பை ஏற்படுத்திய வேளாண் அமைச்சர்

தமிழக விவசாயிகளை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லும் அரசு.. எந்தெந்த நாடு தெரியுமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)