வேளாண் நானோ தொழில் நுட்பத்தின் முன்னோடியான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் கடந்த செப்டம்பர் மாதம் 5 மற்றும் 6 ஆம் தேதி நானோ கனெக்ட் குறித்த உலகளாவிய மாநாட்டை நடத்தியது.
முனைவர். தமிழ்வேந்தன், பதிவாளர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், முனைவர்.K.S சுப்பிரமணியன், கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட், மற்றும் முனைவர். A. வேல்முருகன் உதவி இயக்குநர் ஜெனரல் (SWM), ICAR, புதுதில்லி ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
மாநாட்டின் நோக்கம் என்ன?
நானோ விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக தற்போதைய கண்டுபிடிப்புகள், அவற்றின் பன்முக பயன்பாடுகள், நானோ உயிரியல் பாதுகாப்பு ஒழுங்குமுறை கட்டமைப்பு மற்றும் விவசாயம் தொடர்புடைய இதர துறைகளில் நானோ தொழில்நுட்பத்தின் நிலை ஆகியவற்றைக் வெளிக்கொணரும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வானது மேம்படுத்தப்பட்ட பயன்பாட்டுத்திறன், நானோ உணவு அமைப்புகள், பூச்சிகள், நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிவதற்கான நானோ-அக்ரி உள்ளீடுகள், நானோ உணவு அமைப்புகளில் நானோ தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் நானோ நிவர்த்தி செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுயசார்பை உறுதி செய்யும் அதே வேளையில் பண்ணை உற்பத்தித்திறனை நிலைநிறுத்துவதற்கு நானோ தயாரிப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக பல்வேறு தலையங்க பகுதிகளை வழங்கவும், விவாதிக்கவும், மற்றும் மேம்படுத்தவும் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருந்தது.
TNAU துணைவேந்தர் பெருமிதம்:
நிகழ்வில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர். வெ. கீதாலட்சுமி பேசுகையில், வேளாண்மையில் நானோ தொழில்நுட்பத்தில் உலகளாவிய நிகழ்வை நடத்துவது தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார். இந்தியாவில் உள்ள சவலால்களை எதிர்கொள்ளும் வகையில் ஆராய்ச்சியை தொடங்கும் நோக்கத்துடன் 2010 ஆம் ஆண்டிலேயே வேளாண் நானோ தொழில்நுட்பத்திற்கான பிரத்யேக மையத்தை நிறுவிய இந்தியாவின் முதல் மாநில வேளாண் பல்கலைக்கழகம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் என்று அவர் பெருமிதம் கொண்டார்.
சுருங்கி வரும் விளை நிலங்கள், நீர் பற்றாக்குறை, விவசாயத்தில் இருந்து மக்கள் வெளியேறுதல், குறைந்த உரங்களின் விளைச்சல் விகிதம் மற்றும் பசுமைப் புரட்சியின் பின்தங்கிய நிலையை மேம்படுத்தவும், பண்ணை உற்பத்தி மற்றும் கிராமப்புற வாழ்வாதரத்தை எளிதாக்கும் செயல்முறைகள் மற்றும் தயாரிப்புகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சில சவால்களை விவசாய நானோ தொழில்நுட்பம் மூலம் தீர்க்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
TNAU- நானோ தொழில்நுட்ப மையம்:
TNAU இல் உள்ள நானோ தொழில்நுட்ப மையம் 2010 இல் ரூ. 12.0 கோடி அதிநவீன உள்கட்டமைப்பு வசதி, அதிநவீன உபகரணங்கள் மற்றும் மனித வளக் கட்டிடம் மையம் போன்றவற்றுடன் நிறுவப்பட்டது. 30 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள வெளிப்புற நிதியுதவியுடன் கூடிய ஆராய்ச்சித் திட்டங்களை Globa Affairs Canada, IDRC, DST Nano Mission, ICAR, SERB போன்ற அமைப்புகள் முலம் உருவாக்கியது. இது 10-க்கு மேற்பட்ட நானோ தொழில்நுட்பங்கள், 2 காப்புரிமைகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட உயர் தாக்க காரணி வெளியீடுகளை உருவாக்க உதவியது.
செயல்முறைகள், தயாரிப்புகள், காப்புரிமைகள், வெளியீடுகளை மற்றும் நானோ தொழில்நுட்பத்தின் மூலமாக பொதுமக்களின் பார்வையை மேம்படுத்துதல் தவிர, நாட்டில் நானோ-அக்ரி உள்ளீடுகள் மற்றும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கான DBT ஓழுங்குமுறை வழிகாட்டுதல்களைத் திட்டமிடுவதற்கு தேசிய அளவில் கொள்கை முடிவுகளில் TNAU முக்கிய பங்கு வகித்தது. 2020 ஆம் ஆண்டில் நாட்டில் நானோ உரங்கள் பற்றிய அறிவிப்புக்கு முக்கிய பங்கு வகித்தது.
Read also: அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன?
புதுதில்லியின் ICAR-யின் துணை இயக்குநர் ஜெனரல் (இயற்கை வள மேலாண்மை) இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக பங்கேற்று விவசாய நானோ தொழில்நட்பத்தில் புதுமைகளை உருவாக்கி, வண்ணமயமான உலகளாவிய நிகழ்வாக மாற்றியதற்காக TNAU மற்றும் அமைப்புச் செயலாளரை வாழ்த்தினார். மேலும் அவர் தனது உரையில் குறிப்பிட்ட விவரங்கள் பின்வருமாறு, ”TNAU ஆராய்ச்சியின் புதிய பகுதிகளைத் தொடங்குவதற்குப் பெயர் பெற்றுள்ளது. அது போன்ற ஒரு முக்கியப் பகுதி "விவசாய நானோ தொழில்நுட்பம்" ஆகும். விவசாய நானோ தொழில்நுட்பத்தில் கல்வித் திட்டங்களை வெளிப்படுத்துதல் பத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்குதல், வணிக ரீதியான நானோ தயாரிப்புகளை அறிவியல் பூர்வமாக சரிபார்த்தல், நானோ தயாரிப்புகளை மதிப்பிடுவதற்கு உதவிய கொள்கை கட்டமைப்பை எளிதாக்குதல் ஆகிவற்றில் TNAU முக்கிய பங்கு வகித்தது.”
முனைவர் பி. பாலசுப்பிரமணியம், இயக்குநர் (இயற்கை வள மேலாண்மை) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வரவேற்புரை வழங்கினார். நானோ தொழில்நுட்பமையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் வி. கோமதி, நன்றியுரை வழங்கினார். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி பேச்சாளர்கள தங்கள் விரிவுரைகளை ஆன்லைனில் வழங்கினர்.
Read more:
நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்!
ரூ.13,966 கோடியில் விவசாயிகளுக்காக 7 திட்டங்கள்- அமைச்சரவை ஒப்புதல்!