அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 3 September, 2022 12:30 PM IST
TNAU offers one-day training on “Beekeeping”: Details Inside

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), கோயம்புத்தூரில், வேளாண் பூச்சியியல் துறையில் ஒவ்வொரு மாதமும் "தேனீ வளர்ப்பு" குறித்த ஒரு நாள் பயிற்சி நடப்பது வழக்கமாகும்.

அதே போல், இம்மாதமும், 2022 செப்டம்பர் மாதத்திற்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது. தேதி, நேரம், கட்டணம் குறித்த விவரங்களை இப்பதிவு விளக்குகிறது.

06.09.2022 (செவ்வாய்கிழமை) அன்று இப்பயிற்சி வழங்கப்படும்.

  1. தேனீ வளர்ப்பின் பல்வேறு அத்தியாவசிய அம்சங்களில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது, அந்த வகையில்:
  2. தேனீ இனங்களை அடையாளம் காணுதல் மற்றும் தேனீக்களின் சமூக அமைப்பு
  3. இந்திய தேனீக்களை பெட்டிகளில் வளர்ப்பது, பொது மற்றும் பருவ மேலாண்மை
  4. தேனீ தீவனம், குறுக்கு மகரந்தச் சேர்க்கை மூலம் பயிர்களின் மகசூல் அதிகரிப்பு
  5. தேன் பிரித்தெடுத்தல்
  6. தேனீக்களின் எதிரிகள் மற்றும் நோய்கள் மற்றும் அவற்றின் மேலாண்மை

போன்ற தகவல்களை இப்பயிற்சி அளித்திடும்.

ஒரு நாள் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என பூச்சியியல் துறை, TNAU, கோவை அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதனை மறவாதீர்கள்,

  • அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
  • பயிற்சிக் கட்டணம்: ரூ.590/- (ரூபாய் ஐந்நூற்று தொண்ணூறு மட்டும்) பயிற்சி அன்று செலுத்தினால் போதும்.
  • பயிற்சி நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.
  • மேலும் விவரங்களுக்கு, பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவரைத் தொடர்பு கொள்ளவும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் 641 003. தொலைபேசி: 0422-6611214;
மின்னஞ்சல்: entomology@tnau.ac.in

மேலும் படிக்க:

தமிழகம்: டெல்டாவில் நெல், வாழைகள் நீரில் மூழ்கி நாசம்!

நெல்லுக்கான தமிழ்நாடு அரசு MSP அறிவிப்பு: விவசாயிகள் அதிருப்தி

English Summary: TNAU offers one-day training on “Beekeeping”: Details Inside
Published on: 03 September 2022, 12:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now