தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பூச்சியியல்துறை மூலமாக ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் வளர்ப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள்” பற்றிய ஒரு நாள் பயிற்சி முகாம் அடுத்த மாதம் 5ம் தேதி (05.03.21 -வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் வளர்ப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள்” பற்றிய ஒரு நாள் பயிற்சி முகாம் அடுத்த மாதம் 5ம் தேதி (05.03.21 -வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. அந்த பயிற்சியின் முக்கிய அம்சங்களாவன.
-
ஒட்டுண்ணி வகைகள்
-
ஊண் விழுங்கிகள் , இரை விழுங்கிகள்
-
நெல் அந்துப்பூச்சி வளர்ப்பு முறை
-
டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி வளர்ப்பு
-
புழு ஒட்டுண்ணி வளர்ப்பு
-
கண்ணாடி இறக்கைப் பூச்சி வளர்த்தல்
-
பொறிவண்டு வளர்ப்பு
-
பப்பாளி மாவுப்பூச்சி ஒட்டுண்ணி அசரோபகஸ் வளர்ப்பு
-
பயிர் பாதுகாப்பில் ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் பயன்பாடு
பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் 05.03.21 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்குள்ளாக பூச்சியியல் துறைக்கு தங்கள் செலவில் வந்து சேர வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்வதற்கு ரு.9,00- (ருபாய் தொள்ளாயிரம் மட்டும்) நோpடையாக பயிற்சி நாள் அன்று செலுத்த வேண்டும். பயிற்சி நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு, பேராசிhpயர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை தொடர்பு கொள்லலாம். மேலும், 0422-6611214 , 414 தொலைபேசி எண் வாயிலாகவும், entomology@tnau.ac.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்தும் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
வாடகைக்கு நெல் அறுவடை இயந்திரம் வனியோகம் - விவசாயிகள் பயன்பெற அழைப்பு!!
கால்நடை தொழிலை விரிவாக்கம் செய்ய மானியம்! - விவசாயிகளுக்கு அழைப்பு!