தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த வேளாண் வணிக மேலாண்மைக் கல்வி நிறுவனங்களின் தர வாரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது
தர வாரிசைப் பட்டியல்
தேசிய அளவிலான வேளாண் வணிக மேலாண்மைக் கல்வி நிறுவனங்களின் செயல்திறன் குறித்த தர வாரிசைப் பட்டியல், வேளாண் வணிகம் மற்றும் ஊரகம் சார்ந்த ஆலோசனையை வழங்கும் கான்சப்ட் வேளாண் நுட்ப ஆலோசனை மையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இத்தரவாரிசைப் பட்டியல், வேளாண்மைக் கல்வி நிறுவனங்களின் வேளாண் தொழில் துறை சார்ந்த பாடத்திட்டம் கற்பித்தலில் புதுமை, சேர்க்கை முறை, கல்விக் கட்டணம், விளையாட்டு சார்ந்த கட்டமைப்பு, தொழில் நிறுவனங்களுடனான தொடர்புகள், வேலை வாய்ப்புகள், சர்வதேச மாணவர் பாரிமாற்றம் மற்றும் ஏனைய உள் கட்டமைப்பு வசதிகள் முதலியவற்றின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.
TNAU-க்கு 15 வது இடம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேலாண்மைத்துறை, இந்திய வேளாண் வணிக மேலாண்மைக் கல்வி நிறுவனங்களின் செயல்திறன் குறித்த தர வாரிசைப் பட்டியலில், இந்திய மேலாண்மை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திந்திய வேளாண் வணிகக் கல்வி நிறுவனங்களில் தேசிய அளவில் 15 வது இடம் பிடித்துள்ளது.
வேளாண் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் கீழ் இயங்கி வரும் வேளாண் மற்றும் ஊரக மேலாண்மைத் துறை, வேளாண் வணிக மேலாண்மையில் இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது.
முதுநிலை பட்டப்படிப்பு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுமம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தினால் அங்கீகாரிக்கப்பட்டுள்ளது. இத்துறையில் பயின்ற மாணவர்கள், வேளாண் உற்பத்தி, பதனிடுதல், இடுபொருட்கள், வங்கிகள், சில்லறை வணிகம் மற்றும் ஏனைய வேளாண்மை சார்ந்த நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். சில மாணவர்கள் வேளாண் தொழில் முனைவோர்களாகவும் வெற்றி அடைந்துள்ளனர். இத்துறையில் பயின்ற இளநிலை மாணவர்கள், இந்தியாவின் முதன்மை வணிக மேலாண்மை கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயின்று வருகின்றனர்.
மேலும் படிக்க...
மண் மாதிரியை பரிசோதித்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு வேளாண் இயக்குநர் வேண்டுகோள்!
தென்னையில் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஒட்டும் பொறி!
தேனியில் உரிய பருவத்தில் பாசன நீர்! உணவு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு