தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற விஞ்ஞானிக்கு தேசிய அளவிலான விருது வழங்கப்பட்டது.
குஜராத்தில் உள்ள ஆனந்த் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் வேளாண் காலநிலை சங்கமானது வருடந்தோறும் வேளாண் காலநிலை ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுதலையும், விருதுகளையும் வழங்கி கொளரவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த வருடம் 2021 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் நிறுவன தலைவரும் ஓய்வு பெற்ற பேராசியருமான முனைவர் தி.நா. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இச்சங்கத்தின் கௌரவ விருது காலநிலை ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்தியதற்கும், காலநிலை முன்னறிவிப்புகளை வழங்கியதற்கும் முதுகலை மாணவர்களுக்கு காலநிலை கல்வி போதித்தல் மற்றும் வழிகாட்டியாக இருந்ததற்காகவும் வழங்கப்பட்டது.
இவ்விழாவிருத்தானது, பஞ்சாப் லூதியானாவில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதல் தேசிய மெய்நிகர் வேளாண் காலநிலை கருத்தரங்கில் தமிழ்நாடு வேளாண்;மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நீ. குமார் அவர்கள் தலைமையுரையாற்றி ஓய்வுவெற்ற பேராசிரியருக்கு வேளாண் சங்கத்தின் கௌரவ விருதினை வழங்கி பாராட்டுதலை தெரிவித்தார்.