தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நெல் சந்தை மேம்பாட்டு கூட்டத்தில் விஜிடி -1 நெல் இரகம் குறித்த சிறப்புகள் விளக்கப்பட்டது. குறைந்த செலவில் அதிக மகசூல் தரும் பயிர் என விவசாயிகள், பொதுமக்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பிலும் நம்பிக்கை பெற்றுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த சந்தை மேம்பாட்டு கூட்டத்தில் விஜிடி -1 நெல் இரகம் குறித்த சிறப்புகள் விளக்கப்பட்டது. குறைந்த செலவில் அதிக மகசூல் தரும் பயிர் என விவசாயிகள், பொதுமக்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பிலும் நம்பிக்கை பெற்றுள்ளது.
வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககமும், பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையமும் இணைந்து விஜிடி-1 நெல் சந்தை மேம்பாட்டு கூட்டத்தை நடத்தினர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த சந்தை மேம்பாட்டு கூட்டத்தில் விவசாயிகள், நெல் வணிகர்கள், நெல் ஆலை உரிமையாளர்கள், நெல் ஏற்றுமதியாளர்கள், உணவக உரிமையாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் அகில இந்திய நெல் ஏற்றுமதியாளர் அமைப்பின் செயல் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விஜிடி 1 நெல் இரகம்
இந்த விஜிடி 1 நெல் இரகத்தின் பெற்றோர் ஏடிடீ 43 , சீரக சம்பாநெல் இரகங்களாகும். இதன் வயது 129 (127 – 132) நாட்களாகும். இதன் பருவம் சம்பா அல்லது பின் சம்பா ஆகும். இந்நெல் இரகத்தின் சராசரி விளைச்சல் 5,859 கிலோ , எக்டர் ஆகும். மேலும் சீரக சம்பா மற்றும் டிகேஎம் 13 இரகங்களை விட 32.56 சதவிகிதம் மற்றும் 13.80 சதவிகிதம் முறையேஅதிக மகசூல் கொடுக்கும் தன்மையைக் கொண்டது.
இதன் நெல் இரகத்தின் அதிகபட்ச மகசூல் 9500 கிலோ , எக்டர் ஆகும். இந்நெல் இரகத்தின் நடுத்தர உயரம் 94 செ.மீ (87 – 97 செ.மீ) ஆகும். இது அதிகத் தூர்கள், சாயாத தன்மை, சன்ன இரகம் வெள்ளை அரிசி போன்ற சிறப்பம்சங்களை உடையது. இதன் ஆயிரம் மணிகளின் எடை 8.9 கிராம் ஆகும். இந்நெல் இரகத்தின் அரவைத் திறன் மற்றும் முழு அரிசி காணும் திறன் முறையே 66 சதவிகிதம் மற்றும் 62.1 சதவிகிதம் ஆகும்.
விஜிடி 1 நெல் இரகம் - சமையல் பண்புகள்
இந்நெல் இரகத்தின் சமையல் பண்புகள் மற்றும் சுவை பண்புகள் சீரக சம்பா இரகத்தை ஒத்தது. இந்நெல் இரகத்தின் அரிசியைக் கொண்டு சமைத்த சாதம் மிருதுவாகவும், மிதமான வாசனையுடனும், உதிரியாகவும் இருக்கும். இந்நெல் இரகத்தின் அரிசி பிரியாணி மற்றும் குஸ்கா செய்ய உகந்தது. இது இலைச்சுருட்டுப்புழு, குலை நோய் மற்றும் செம்புள்ளி நோய் ஆகியவற்றிற்கு மிதமான எதிர்ப்புத் திறன் உடையது. இது அனைத்து மாவட்டங்களிலும் பயிரிட ஏற்ற இரகமாகும்.
விவசாயிகள் பாராட்டு
விஜிடி 1 இரகம் சாகுபடி செய்த விவசாயிகள், இந்த இரகமானது சாயாத தன்மை கொண்டதாகவும், அதிக தூர்களுடன், அதிக மகசூல் தருவதாகவும், சீரக சம்பா இரகத்திற்கு மாற்றான இரகமாக இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்
மேலும் படிக்க..
சேலத்தில் நடைபெற்ற சிறுதானிய வகை கண்காட்சி! விவசாயிகள் பங்கேற்பு!
டிச.6யை பாரம்பரிய நெல் தினமாக அறிவிக்க வேண்டும்- தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை!
வீட்டுத் தோட்ட இடுபொருட்களை மானிய விலையில் வாங்க ஆதார் கட்டாயம்!