மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 March, 2021 4:26 PM IST

விவசாயிகளை பாதுகாக்க புதிய சட்டங்கள் இயற்றப்படும், நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை காங்., தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

  • அரசு வேலைவாய்ப்பில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு

  • பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ள சிறந்த 500 இளைஞர்கள், இளம்பெண்களைத் தேர்ந்தெடுத்து உணவு, உறைவிடம் வழங்கி 3 ஆண்டுகள் குடிமைப் பணி பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடித்தவுடன் தமிழகக் காவல்துறையில் இரண்டாம் நிலைக் காவலர்களாக பணியமர்த்தப்படும்.

  • புதிய அரசு அமைந்ததும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை

  • கல்வி, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்க நடவடிக்கை

  • மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்துவோம்

  • விவசாயிகளை பாதுகாக்க புதிய சட்டங்கள் இயற்றப்படும்

  • நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

  • அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி ஒதுக்கீடு 10%ஆக உயர்த்தப்படும்

  • ஆணவப் படுகொலையை தடுக்க தனி சட்டம்

  • உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்க நடவடிக்கை

  • புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரி விலக்கு

  • தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

  • சட்டமன்ற மேலவையை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்வோம்

  • இந்து அறநிலையத்துறைக்குட்பட்ட திருக்கோவில்களில், ஆகம விதிக்குட்பட்டு அர்ச்சகராகப்பாடசாலைகளில் பயின்று தேர்ச்சி பெற்ற இந்து மதத்தை சேர்ந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பணிபுரியும் விதத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம், மின்மோட்டோர் மானியம் மேலும் பல... திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!!

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.7,500 உழவு மானியம்: அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி!

English Summary: TNCC promised to create New law to protect farmers in his Tamilnadu election manifesto
Published on: 16 March 2021, 04:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now