தமிழ்நாடு தேர்வாணையம் குரூப்-1 பணிக்கான தேர்வு, பணி விவரங்கள், சம்பள விவரங்கள், கல்வித் தகுதி போன்ற தகவல்களை அறிவித்துள்ளது. இதைப் பற்றிய முழு விவரத்தை, இந்தப் பதிவில் காணலாம்.
தமிழ்நாடு குடிமைப் பணி, தமிழ்நாடு வணிகவரிப் பணி, தமிழ்நாடு கூட்டுறவுப் பணி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சிப் பணி, தமிழ்நாடு பொதுப் பணித்துறையில் நிரப்பப்பட உள்ள துணை ஆட்சியர், துணைக் காவலர், உதவி ஆணையர், வணிகவரித் துறை, துணைப் பதிவாளர், உதவி இயக்குநர், ஊரக வளர்ச்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 91 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பாணையை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆகஸ்ட் 22 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க்கின்றனர்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
துணை ஆட்சியர் | 18 |
துணைக் காவல் கண்காணிப்பாளர் (வகை-1) | 26 |
உதவி ஆணையர் வணிகவரித் துறை | 25 |
கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் | 13 |
உதவி இயக்குநர், ஊரக வளர்ச்சித் துறை | 07 |
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தமிழ்நாடு பொதுப்பணி | 03 |
BREAKING: GST வரி விதிப்பு குறித்து புதிய அப்டேட் - நீர்மலா சீதாராமன் ட்வீட்
கல்வித் தகுதி:
வணிகம் மற்றும் சட்டம் இரண்டிலும் பட்டம் பெற்றவர், வரி விதிப்பு சட்டங்களில் டிப்ளமா, பொருளாதாரம், கல்வி, சமூகவியல், புள்ளியியல் அல்லது உளவியலில் பட்டம், சமூக அறிவியல், சமூகவியலில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமா படித்தவர்கள், தொழில்துறை அல்லது தனிநபர் மேலாண்மை அல்லது தொழிலாளர் நலனில் அனுபவம், கிராமப்புற சேவையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
தமிழகம்: 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
வயது வரம்பு:
01-07-2022 தேதியின்படி 21 வயது நிறைவடைந்தவராகவும் 39 வயதிற்குள் இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100 முதல் 2,08,700
விண்ணப்பக் கட்டணம்:
பதிவுக் கட்டணம் ரூ.150, முதனிலைத் தேர்வு ரூ.100, முதன்மை எழுத்துத் தேர்வு ரூ.200 செலுத்த வேண்டும். விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
அனைவருக்கும் வீடு திட்டம்.. உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள்!
தேர்வு முறை:
நேர்முகத் தேர்வு அடங்கிய பதவிகளுக்கு தெரிவு மூன்று நிலைகளைக் கொண்டது. எழுத்துத் தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, நேர்காணல், வாய்மொழித் தேர்வு மற்றும் கலாந்தாய்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
www.tnpsc.gov.in / www.tnpscexams,in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: 31-10-2022
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22-08-2022
மேலும் படிக்க:
IT ஊழியர்களே உஷார்... TCS, Accenture, HCL போன்ற நிறுவனங்களின் அதிரடி முடிவு!
PM Kisan திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற இதை செய்ய வேண்டியது கட்டாயம்!