News

Thursday, 28 March 2024 11:55 AM , by: Yuvanesh Sathappan

TNPSC 2024: Group-1 Exam Notification!

தமிழ்நாடு தேர்வாணையம் குரூப்-1 பணிக்கான தேர்வு, பணி விவரங்கள், சம்பள விவரங்கள், கல்வித் தகுதி போன்ற தகவல்களை அறிவித்துள்ளது. இதைப் பற்றிய முழு விவரத்தை, இந்தப் பதிவில் காணலாம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 90 பணியிடங்களுக்கான குரூப் - 1 தேர்வு அறிவிப்பை இன்று (28.03.2024) வெளியிட்டுள்ளது.

ஜூலை மாதம் 13 ஆம் தேதி 90 காலிப் பணியிடங்களுக்கான குரூப் - 1 தேர்வு தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உதவி ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தேர்வு நடைபெறவுள்ளது.

இன்று முதல் தேர்வர்கள் ஆன்லைன் மூலம் https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

குரூப் 1 தேர்வுக்கு 90 காலி இடங்கள் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அனைத்து பணியிடங்களுக்கும் குறைந்தபட்ச வயது 21 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது 34-க்குள் இருக்க வேண்டும்.

இதில் எம்பிசி, டிசி, பிசி முஸ்லிம்கள், எஸ்சி, எஸ்டி தேர்வாளர்களுக்கும் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த கைம்பெண்களுக்கும் 39 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்

பணியிடத்தின் பெயர் காலி இடங்கள்

துணை ஆட்சியர்

16

துணை காவல் கண்காணிப்பாளர்

23
உதவி ஆணையர் (வணிக வரித்துறை) 14
துணைப் பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள்

21
ஊரக மேம்பாட்டு உதவி இயக்குநர் 14
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 1
தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை மாவட்ட அலுவலர் 1
மொத்தம்  90

மேலும் முழு தகவல்களை அறிந்திட கீழ்காணும் பக்கத்தை பார்வையிடவும்

https://www.tnpsc.gov.in/Document/english/04_2024_GRP1_ENG_.pdf

மேலும் படிக்க

AGRISTACK மற்றும் GRAINS திட்ட பணிகளை கண்காணிக்க ஆட்சேர்ப்பு- விண்ணப்பிப்பது எப்படி?

ONDC: விவசாயிகளின் கூட்டமைப்பான FPO லாபம் பார்க்க சூப்பர் வழி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)