பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 24 February, 2022 9:34 AM IST
TNPSC: Apply for Group 2, 2A Exams! Details inside!

தமிழகம்: வரும் மே 21 ஆம் தேதி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகளுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டு திட்ட அறிக்கை கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இந்த அறிக்கையின்படி குரூப் 2 பிரிவில் 116 காலியிடங்களும், குரூப் 2ஏ பிரிவில் 5,413 காலியிடங்களும் உள்ளன. இந்தக் காலியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு மே மாதமும் பிரதானத் தேர்வு செப்டம்பரிலும் நடைபெறவுள்ளதாக ஆண்டு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் இந்த பணியிடங்களுக்கான் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் மார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம் என TNPSC அறிவித்துள்ளது.

முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் ஜூனிலும், பிரதானத் தேர்வுக்கான முடிவுகள் டிசம்பரிலும் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளுக்கான அறிவிப்பு பிப்ரவரியில் வெளியாகும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 , 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து 18-02-2022 அன்று சென்னையில் தேர்வாணைய வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்:

குரூப் 2 பிரிவில் 116 காலியிடங்களும் குரும் 2ஏ பிரிவின் கீழ் 5413 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணை வரும் 23 ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியாகும் எனவும், அன்று முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

குரூப் 2 , குரூப் 2 ஏ தேர்வுகளுக்கு பிப்ரவரி 23 முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடதக்கது.

குரூப் 2 , குரூப் 2 ஏ தேர்வு மே மாதம் 21 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேள்விதாள் குறித்த விவரம்: (Question Paper Details)

மேலும் குரூப் 2 தேர்வில் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன்படி தமிழில் தேர்வு எழுதுபவர்களுக்கு 200 கேள்விகளில் 100 கேள்விகள் தமிழ்மொழி தகுதித் தேர்வாக இருக்கும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. பொது அறிவியல் பிரிவில் இருந்து 75 மதிப்பெண்களும், நுண்ணறிவு பிரிவில் இருந்து 25 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும், தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதன்மை எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதமும் டிசம்பர் 2022-2023 ஜனவரி மாதங்களில் கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வு இனி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரைக்கு பதில், காலை 9.30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெறும் பிற்பகலுக்கான தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என்று தலைவர் பாலசந்திரன் தெரிவித்திருப்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

PM : கடந்த 7 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட கிராம திட்டங்கள்!

குடியரசு தின தமிழக அலங்கார ஊர்திகள் குறித்து புதிய அறிவிப்பு!

English Summary: TNPSC: Apply for Group 2, 2A Exams! Details inside!
Published on: 23 February 2022, 04:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now