
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை (TNPSC) இரண்டாகப் பிரிக்க அரசு திட்டமிட்டு கொண்டிருக்கும் வேளையில் தற்போது இந்த திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி (TNPSC)
தமிழகத்தில் நடைபெறும் அரசு துறைத் பணிகளிடங்களுக்கான தகுதி தேர்வுகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் எனவும், சார்பு நிலை பணியிடங்களுக்கான தேர்வினை நடத்துவதற்கு புதிய தேர்வு வாரியத்தை அமைக்க வேண்டும் எனவும் அரசு தற்போது திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து, வரும் மே 8 ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உயர் அதிகாரிகளின் தலைமையில் தேர்வாணையம் இரண்டாக பிரிப்பது தொடர்பாக கலந்தாய்வு செய்யப்பட இருக்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ்
இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இரண்டாகப் பிரிக்கப்பட்டால் அதில் முறை கேடுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது இருப்பது போலவே தனித்தன்மையுடன் விளங்க வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுவாணையத்தை பிரித்து புதிய தேர்வு வாரியம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க
ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோடு பணப்பரிவர்த்தனை: காஞ்சிபுரத்தில் அறிமுகம்!
இயற்கைக்கு மாறும் திருப்பதி: கோவில் வளாகத்தில் மூங்கில் பாட்டில்களில் தண்ணீர் விற்பனை!