2023ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வுக்கான அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி (TNPSC)
TNPSV இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2022ஆம் ஆண்டு குரூப் 2-க்கு நடைபெற்று முடிந்த முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதேபோன்று, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு 2023 நவம்பரில் வெளியாகும் எனவும் அதற்கான தேர்வு 2024 பிப்ரவரியில் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு 2024 பிப்ரவரியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், அதற்கான காலிப் பணியிடங்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, 7301 குரூப் 4 நிலை காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கடந்த மார்ச் மாதம் 30-ம் தேதி வெளியிட்டது. இதற்கான, எழுத்துத் தேர்வு கடந்த ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்றது. 16.2 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க
அடுத்தப் புயலுக்கு ரெடியா இருங்க: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
பணத்தை சேமிக்க நினைப்பவரா நீங்கள்? இந்த திட்டம் தான் பெஸ்ட் சாய்ஸ்!