News

Thursday, 06 June 2019 12:16 PM

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் இப்பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 475 பணியிடங்கள் காலியாக  உள்ள நிலையில் இதற்கு ரூ.1.77 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்வு வாரியம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.

பணி: ஒருங்கிணைந்த பொறியியல் பணி

காலி பணியிடங்கள்: 475

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.6.2019

வயது வரம்பு:

30 வயதிற்கு  உட்பட்டிருக்க வேண்டும்

இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுண்டு

கல்வித்தகுதி:

எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், உற்பத்தி, விவசாயம், இண்டஸ்ட்ரியல் பொறியியல், டெக்ஸ்டைல், கெமிக்கல், ஆர்கிடெக்சர், ஸ்டக்சரல் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிரிவுகளில் பி.இ.(B.E), பி.டெக்(B.TECH) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் ரூ 150,

பதிவு கட்டணம் ரூ 200

முதல் முறை பதிவு செய்பவர்கள் ரூ 200 செலுத்தி பதிவு செய்ய வேண்டும் .

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

பனி விவரங்கள்:

பணி: உதவி மின் பரிசோதகர்

காலியிடங்கள்: 12

ஊதியம்: மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில்

வயது வரம்பு: 39 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பணி: உதவி பொறியாளர் (விவசாய பொறியியல்)

காலியிடங்கள்: 94

பணி: உதவி பொறியாளர் (சிவில்), (நீர் மேலாண்மை)

காலியிடங்கள்: 120

பணி: உதவி பொறியாளர் (சிவில்), (கட்டிடம்)

காலியிடங்கள்: 73

பணி: உதவி பொறியாளர் (மின்சாரத் துறை)

காலியிடங்கள்: 13

பணி: தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர்

காலியிடங்கள்: 26

பணி: உதவி பொறியாளர் (சிவில்) (நெடுஞ்சாலைத் துறை)

காலியிடங்கள்: 123

பணி: உதவிப் பொறியாளர் (மீன் வளம்)

காலியிடங்கள்: 03

பணி: உதவி பொறியாளர் (சிவில்) (கடல் வாரியம்)

காலியிடங்கள்: 02

பணி: இளநிலை கட்டட வடிவமைப்பாளர்

காலியிடங்கள் : 15

ஊதியம்: மாதம் ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரையில்

விண்ணப்பிக்கும் முறை:

http://www.tnpsc.govt.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடங்கள் குறித்து மேலும் விபரங்களை அறிய விண்ணப்ப படிவத்தை பெறவும்,  http://www.tnpsc.gov.in/Notifications/2019_18_NOTIFN_CESE.pdf என்ற இணையதள மூலம் தெரிந்துகொள்ளவும்.

k.sakthipriya 

krishi jagran 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)