News

Saturday, 03 September 2022 03:22 PM , by: T. Vigneshwaran

TNPSC

நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

அதேபோன்று, குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5413 காலிபதவிகளுக்கான குரூப் 2/2ஏ முதல்நிலை தேர்வை டிஎன்பிஎஸ்சி கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. அதேபோன்று, 7138 குரூப் 4 லிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் ஜுலை 24ம் தேதி நடைபெற்றது.

குரூப் 2/2ஏ முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுற்று மூன்று மாதங்கள் முடிவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், தேர்வெழுதிய லட்சக்கணக்கான மன உளைச்சலில் இருந்து வந்தனர். டிஎன்பிஎஸ்சி ஆள் சேர்க்கையில் பெண்களுக்கு அளிக்கப்பட இடஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தீர்ப்பு வெளியான பிறகு, தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், பல்வேறு அரசுப் பணி சேர்க்கைக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் தொடர்பான முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க:

ரூ.1.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் என மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)