தமிழகத்தில் காலியாக உள்ள பல்வேறு அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நடை பெறும் நாள், விண்ணப்ப விவரங்கள் போன்ற தகவல்களை வெளியிட்டுள்ளது.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், விஏஓ போன்ற பணியிடங்களுக்கு ஒருங்கிணைத்து குரூப் 4 தேர்வு நடை பெற உள்ளது. இந்த தேர்வினை தமிழக அரசின் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ளது.
தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் வரும் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் ஜூலை 14 ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 1 ஆம் தேதி தேர்வு நடை பெற உள்ளது. பணி விவரங்கள் பின் வருமாறு
அமைப்பு: தமிழக அரசு
காலியாக உள்ள பணி இடங்கள்: இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், விஏஓ
காலியிடங்கள்: பின்னர் அறிவிக்கப்படும்
வேலைவாய்ப்பு அறிவித்த நாள்: 7 ஜூன் 2019
விண்ணப்பிக்கும் நாள்: 14 ஜூன் 2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14 ஜூலை 2019
தேர்வு நடை பெற உள்ள நாள்: 1 செப்டம்பர் 2019
விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்
விண்ணப்பக் கட்டணம்: விரைவில் தெரிவிக்கபடும்
இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும். மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/ என்ற இணைய தளத்தை பார்க்கவும்.
Anitha Jegadeesan
Krishi Jagran