அண்மையில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4)
முன்னதாக, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் தட்டச்சர், பண்டகக் காப்பாளர் உள்ளிட்ட குரூப் 4 நிலை பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்றது. இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் 1 பதவிக்கு 2 பேர் என்ற விகிதத்தில் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கலந்தாய்வின் முடிவில் 7301 பேர் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணி அமர்த்தப்பட உள்ளனர்.
குரூப் 4 எழுத்துத் தேர்வு முடிவுற்று கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் நெருங்கும் நிலையில்,அதற்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும், அடுத்த ஆண்டு குரூப் 4, குரூபி 2/2ஏ, குரூப் 1 தேர்வுகள் நடைபெறாத என்று அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், தற்போதைய குரூப் 4 முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது.
தேர்வர்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை அவ்வப்போது பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும் படிக்க
இனிமே இ-சேவை மையத்திலேயே எல்எல்ஆர் பெற முடியும்: விரைவில் அமலுக்கு வரப்போகுது!
EPFO: குறைந்தபட்ச பென்சன் உயர்வு எப்போது? மத்திய அரசின் பதில் என்ன?